விவசாயத்துறை அமைச்சகம்

வாரணாசியில் உள்ள இந்தியக் காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்தில் 2024 பிப்ரவரி 03 முதல் 05 வரை மண்டல விவசாயிகள் கண்காட்சி நடைபெற உள்ளது.

Posted On: 02 FEB 2024 3:19PM by PIB Chennai

வாரணாசி, ஷாஹன்ஷாபூர் வளாகத்தில் 2024 பிப்ரவரி 03 முதல் 05 வரை மூன்று நாட்களுக்குப் பெரிய அளவிலான வேளாண் கண்காட்சியை ஐ.சி.ஏ.ஆர் – இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனம், ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கண்காட்சியில் உத்தரப்பிரதேச மாநில வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சூர்ய பிரதாப் ஷாஹி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கெளன்சிலின் தலைமை இயக்குநர் டாக்டர் ஹிமான்ஷு பதக், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கெளன்சிலின் மூத்த அதிகாரிகளான டாக்டர் சஞ்சய் குமார் சிங், டாக்டர் யுஎஸ் கெளதம், டாக்டர் சுதாகர் பாண்டே ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

மேம்பட்ட விவசாய நடைமுறைகள், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், மேம்பட்டக் காய்கறி சாகுபடி, உயர் தொழில்நுட்ப நாற்றங்கால், இயற்கை விவசாயம், உணவு பதப்படுத்துதல் போன்றவற்றின் மூலம் மனித ஆரோக்கியம் மற்றும் விவசாயிகளின் வளம் குறித்து விளக்கும் வகையில் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஐ.ஐ.வி.ஆர் இயக்குநர் டாக்டர் துஷார் காந்தி பெஹெரா கூறினார். மதிப்புக் கூட்டுதல், வேளாண் இயந்திரமயமாக்கல், ட்ரோன்கள், பூச்சி மற்றும் நோய் நிர்வாகம் போன்ற தலைப்புகளில் தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறும். இதில் நாடு முழுவதிலுமிருந்து வேளாண் வல்லுநர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடுவார்கள்.

----

(Release ID: 2001829)

ANU/SMB/PKV/KPG/KRS

 



(Release ID: 2001962) Visitor Counter : 35


Read this release in: English , Urdu , Hindi , Telugu