விவசாயத்துறை அமைச்சகம்
இடைக்கால நிதிநிலை அறிக்கை விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர் சக்தியின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது - திரு முண்டா
Posted On:
01 FEB 2024 4:35PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் குறித்து மத்திய விவசாயிகள் நலன் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா கருத்து தெரிவித்தார். இந்த நிதிநிலை அறிக்கை பிரதமர் திரு நரேந்திர மோடியின் உத்தரவாதத்தைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்றும், இந்தியா வளர்ச்சிப் பாதையில் விரைந்து பயணிக்க வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். இந்த இடைக்கால பட்ஜெட் நாட்டின் விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர் சக்தியின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கும் என்று அரசு உறுதியளித்துள்ளது. அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் நிச்சயமாக நமது விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்று அவர் தெரிவித்தார்.
அனைவரும் இணைவோம்-அனைவரும் உயர்வோம்-அனைவரின் நம்பிக்கை -அனைவரும் முயற்சி என்ற உணர்வு இடைக்கால பட்ஜெட்டில் பிரதிபலிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக விவசாயிகளின் நலனுக்காக ஒன்றன் பின் ஒன்றாகப் பல உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவற்றில், பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டம் மிகவும் முக்கியமானது. இதன் கீழ் இதுவரை 11.80 கோடி விவசாயிகள் நேரடிப் பலன்களைப் பெற்றுள்ளனர் மற்றும் இடைத்தரகர்கள் இல்லாமல், சுமார் ரூ.2.81 லட்சம் கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சுமார் 4 கோடி விவசாயிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விவசாயிகளின் நலனுக்காக 1361 இ-நாம் சந்தைகள் தொடங்கப்பட்டுள்ளன, அவற்றில் இதுவரை ரூ.3 லட்சம் கோடி வர்த்தகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
-----
(Release ID: 2001467)
ANU/SMB/BS/KPG/KRS
(Release ID: 2001655)
Visitor Counter : 110