ரெயில்வே அமைச்சகம்

2023, ஏப்ரல் 1 முதல் 2023, டிசம்பர் 31 வரையிலான 9 மாதங்களில் இந்திய ரயில்வே இதுவரை இல்லாத அளவுக்கு கேபெக்ஸ் (மூலதனச் செலவுப்) பயன்பாட்டைக் கண்டுள்ளது

Posted On: 29 JAN 2024 11:23AM by PIB Chennai

இந்த நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் டிசம்பர் 2023 வரை இந்திய ரயில்வே சுமார் 75% மூலதனச் செலவுப் பயன்பாட்டைக் கண்டுள்ளது (இதுவரை இல்லாத அளவுக்கு இது அதிகமாகும்). இந்திய ரயில்வே டிசம்பர் 2023 வரை ரூ.1,95,929.97 கோடி செலவிட்டுள்ளது. இது இந்த நிதியாண்டில் ரயில்வேயின் மொத்த மூலதனச் செலவில் (ரூ. 2.62 லட்சம் கோடி) தோராயமாக 75% ஆகும்.

டிசம்பர் 2022-ன் இதே காலகட்டத்தில், இந்திய ரயில்வே ரூ. 1,46,248.73 கோடி கேபெக்ஸ் பயன்பாட்டைக் கண்டது. இந்த ஆண்டு, கேபெக்ஸ் பயன்பாடு கடந்த ஆண்டின் தொடர்புடைய காலத்துடன் ஒப்பிடும்போது தோராயமாக 33% அதிகம்.

புதிய வழித்தடங்கள், இரட்டிப்பாக்குதல், பாதை மாற்றுதல் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களில் இந்த முதலீடு காணப்படுகிறது. ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. பாதுகாப்பு தொடர்பான பணிகளை மேம்படுத்த கணிசமான தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது.

***

(Release ID: 2000276)

ANU/SMB/RR



(Release ID: 2000300) Visitor Counter : 81