புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

ஐஆர்இடிஏ 'பஹல்' விஜிலென்ஸ் இதழை வெளியிடுகிறது

Posted On: 26 JAN 2024 3:04PM by PIB Chennai

மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐஆர்இடிஏ), அதன் ஊழல் கண்காணிப்புத் துறையின் 'பஹல்' என்ற அறிவார்ந்த இதழை வெளியிட்டுள்ளது. இந்த இதழை ஐஆர்இடிஏ- வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ் ஜனவரி 25, 2024 அன்று வெளியிட்டார். புதுதில்லியில் உள்ள ஐ.ஆர்.இ.டி.ஏ.வின் பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் தலைமை விஜிலென்ஸ் அதிகாரி திரு அஜய் குமார் சஹானி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முன்முயற்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முயற்சிகளை ஊக்குவிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.

வெளியீட்டு விழாவின் போது, தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு பிரதீப் குமார் தாஸ், 'பஹல்' நிகழ்ச்சியில் ஊழியர்கள் மற்றும் குழந்தைகளின் பங்கேற்பு அதிகரிப்பதன் சாத்தியமான தாக்கத்தை எடுத்துரைத்து, இந்த முயற்சிக்கு தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய கட்டுரைகள் மற்றும் கவிதைகள் போன்ற பங்களிப்புகள் மூலம் குழந்தைகளிடையே விழிப்புணர்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

"விஜிலென்ஸ் ஜர்னலில் நமது ஊழியர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் தீவிர பங்கேற்பை ஊக்குவிப்பது விழிப்புணர்வை அதிகரிப்பது மட்டுமல்லாமல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியில் இன்னும் ஆழமான தாக்கத்தை உருவாக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று திரு தாஸ் மேலும் கூறினார்.

 

AD/PKV/KRS

***

 



(Release ID: 1999927) Visitor Counter : 97


Read this release in: English , Urdu , Hindi , Punjabi