ஜல்சக்தி அமைச்சகம்
'நீர் தொலைநோக்குப் பார்வை @ 2047- குறித்த இரண்டு நாள் அகில இந்திய செயலாளர்கள் மாநாடு நிறைவடைந்தது
Posted On:
25 JAN 2024 12:08PM by PIB Chennai
நாட்டின் நீர் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய நோக்கத்துடன் 'நீர் தொலைநோக்குப் பார்வை @ 2047 - முன்னோக்கிய வழி' குறித்த இரண்டு நாள் 'அகில இந்திய செயலாளர்களின் மாநாடு' மகாபலிபுரத்தில் நேற்று நிறைவடைந்தது. 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் 30 செயலாளர்கள் மற்றும் 300-க்கும் அதிகமான பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்று, மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் 2023, ஜனவரி 5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற்ற" முதலாவது மாநாட்டின் 22 பரிந்துரைகள் மீது எடுக்கப்பட்டநடவடிக்கைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
குடிநீர் மற்றும் அதன் ஆதார நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளித்தல், காலநிலை பின்னடைவை உருவாக்குதல், தேவை மற்றும் வழங்கல் பக்க மேலாண்மை, பெரிய மற்றும் சிறிய அளவில் நீர் சேமிப்பை மேம்படுத்துதல், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், நீர் பயன்பாட்டின் திறனை அதிகரித்தல், ஒவ்வொரு மட்டத்திலும் நீர் சேமிப்பு திட்டங்களை தீவிரப்படுத்துதல், நதிகள் இணைப்பை ஊக்குவித்தல், நதிகளின் ஆரோக்கியத்தை கண்காணித்தல் மற்றும் சுற்றுச்சூழல் ஓட்டத்தை பராமரித்தல் ஆகியவை அந்த 22 பரிந்துரைகளில் அடங்கும். தகுந்த வெள்ள மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும். இந்தப் பரிந்துரைகளைப் பின்பற்றி நடவடிக்கைகளை துரிதப்படுத்த இந்த மாநாடு நடவடிக்கை எடுக்கிறது.
இந்த மாநாடு நீர் மேலாண்மை பகுதியில் ஐந்து கருப்பொருள் அமர்வுகளாக பிரிக்கப்பட்டது. மாநாட்டின் முதல் நாள் காலநிலை பின்னடைவு மற்றும் நதி சுகாதாரம் மற்றும் நீர் நிர்வாகம் ஆகிய இரண்டு கருப்பொருள் அமர்வுகளை உள்ளடக்கியது. மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் அமைச்சர்கள் அளவிலான கூட்டமும் நடைபெற்றது. நமது சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழலின் நல்வாழ்வுக்காக நீரின் நிலையான மேலாண்மையை உறுதி செய்வதற்கு ஒத்துழைப்பு மற்றும் புதுமையின் கடுமையான தேவைகளை அமைச்சர் சுட்டிக்காட்டினார். நாட்டில் நீர் பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கு மத்திய-மாநில அரசுகளின் பங்களிப்பை வலுப்படுத்துவது என்ற உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மாநாட்டின் இரண்டாவது நாளில் 'நீர் பயன்பாட்டு திறன்', 'நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மை', 'மக்கள் பங்கேற்பு ஆகிய மூன்று கருப்பொருள் அமர்வுகள் நடைபெற்றன.
மாநாட்டின் சுருக்கமான அறிக்கை மற்றும் முக்கிய அம்சங்களை தேசிய நீர் இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி அர்ச்சனா வர்மா வழங்கினார்.
மாநாட்டில் கலந்து கொண்டவர்களிடமிருந்து ஆலோசனைகள் மற்றும் எடுத்துக்காட்டுகளும் கோரப்பட்டன. தொடர் பேச்சுவார்த்தை மற்றும் விவாதங்கள் மூலம் இந்த மாநாட்டு செயல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக கவனம் செலுத்தும் துறைகளில் செயலாளர்களைக் கொண்ட செயல் குழுவை உருவாக்க உத்தேசிக்கப்பட்டது.
நிறைவாக, நாட்டின் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசுத் துறைகள் மற்றும் அமைச்சகங்களை ஒரே மேடையில் கொண்டு வர உதவிய இந்த மாநாட்டை நடத்துவதற்கு அனைத்து ஆதரவையும் வழங்கிய தமிழக அரசுக்கு திருமதி வர்மா மனமார்ந்த சிறப்பு நன்றியைத் தெரிவித்தார்.
---
(Release Id: 1999446)
ANU/AD/PKV/KPG/KRS
(Release ID: 1999649)
Visitor Counter : 81