உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜீவன் ரக்ஷா பதக்கங்கள் - 2023 வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்

Posted On: 25 JAN 2024 12:35PM by PIB Chennai

உயிரைப் பாதுகாப்பதில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 3 பேருக்கும், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 7 பேருக்கும், ஜீவன் ரக்ஷா பதக்கம் 21 பேருக்கும் என 31 பேருக்கு ஜீவன் ரக்ஷா பதக்கங்கள் -2023 வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 3 பேருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்படுகிறது.

ஜீவன் ரக்ஷா பதக்கம் பெறுபவர்களில் 2 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த பதக்கங்கள், ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றுவதில் மனித இயல்பின் பாராட்டத்தக்க செயலுக்காக வழங்கப்படுகின்றன. இந்த விருது சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம், ஜீவன் ரக்ஷா பதக்கம் ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அனைத்துத் தரப்பு மக்களும் இவ்விருதுகளுக்குத் தகுதியுடையவராவர். இந்த விருது மரணத்திற்குப் பின்னரும் வழங்கப்படுகிறது.  

இந்த விருது, பதக்கம், மத்திய உள்துறை அமைச்சர் கையொப்பமிட்ட சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.  

-----

ANU/AD/PKV/KPG/RR


(Release ID: 1999574) Visitor Counter : 181