பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப்பிரதேச அமைப்பு தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 24 JAN 2024 9:15AM by PIB Chennai

உத்தரப்பிரதேச மாநில அமைப்பு தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"ஆன்மீகம், அறிவு, கல்வி என அனைத்தையும் கொண்ட பூமியான உத்தரபிரதேசத்தின் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களுக்கும் மாநிலத்தின் அமைப்பு நாளில் நல்வாழ்த்துகள். கடந்த ஏழு ஆண்டுகளில், இம்மாநிலம் வளர்ச்சி தொடர்பான  புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளது. இதில் மாநில அரசும் மக்களும் பெரிய அளவில் பங்கெடுத்துள்ளனர். வளர்ச்சியடைந்த இந்தியாவின் லட்சியப் பயணத்தில் உத்தரப்பிரதேச மாநிலம் முக்கியப் பங்காற்றும் என்று நம்புகிறேன்."

----

(Release ID:1998988)

SMB/PLM/KPG/KRS

 


(வெளியீட்டு அடையாள எண்: 1999104) வருகையாளர் எண்ணிக்கை : 134