உள்துறை அமைச்சகம்
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் 5-வது சர்வதேச மற்றும் 44-வது அகில இந்திய குற்றவியல் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று உரையாற்றினார்
Posted On:
23 JAN 2024 5:34PM by PIB Chennai
குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் 5-வது சர்வதேச மற்றும் 44-வது அகில இந்திய குற்றவியல் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா இன்று உரையாற்றினார்.
அமித் ஷா தனது உரையில், இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு ஒரு புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில் இந்த மாநாடு தொடங்குகிறது என்றார். 150 ஆண்டுகள் பழமையான குற்றவியல் நீதிச் சட்டங்களை இந்தியா ரத்து செய்து, புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மூன்று சட்டங்களில் உள்ள இரண்டு முக்கிய பிரச்சினைகள் இந்த மாநாட்டுடன் தொடர்புடையவை என்று அவர் கூறினார்.
முதலாவதாக, சரியான நேரத்தில் நீதி வழங்குவது, இரண்டாவதாக, தண்டனை விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் குற்றங்களைக் கட்டுப்படுத்துவது. இந்த மூன்று சட்டங்களிலும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த இரண்டு பிரச்சினைகளையும் முன்னெடுத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். நாங்கள் ஒரு தைரியமான முடிவை எடுத்துள்ளோம் என்றும், 7 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்பட்ட குற்றங்கள் நடந்த இடத்திற்கு தடய அறிவியல் அதிகாரி செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சர் கூறினார்.
நீதிமன்ற விசாரணைகள் என்றும், அரசு தரப்பு வாதத்தை முன்வைப்பது போன்ற விசாரணைகளை எளிமையாக்கும் என்றும் அவர் கூறினார். இது தண்டனை விகிதத்தை அதிகரிக்கவும் உதவும். இதனுடன், முழு செயல்முறையையும் நவீனப்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 5 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு உலகின் மிக நவீன அமைப்பாக இருக்கும் என்று திரு ஷா கூறினார்.
இன்றைய மாநாடு தடயவியல் நடத்தை அறிவியல் என்ற தலைப்பில் நடைபெறுகிறது என்றும் இது வளர்ந்து வரும் துறை என்றும் திரு அமித் ஷா கூறினார். கண்டிப்பான நிர்வாகம் மற்றும் சிறந்த நீதித்துறை போலவே நடத்தை அறிவியலும் குற்றங்களைத் தடுப்பதில் சமமான பங்கை வகிக்க முடியும் என்று அவர் கூறினார்.
இந்த யோசனை நாங்கள் உருவாக்கியுள்ள செயல் முறைகளை விட ஒரு படி மேலே உள்ளது என்று அவர் கூறினார். நடத்தையை நாம் நன்கு ஆராய்ந்து, ஆரம்பக் கல்வியில் அதற்கு இடம் கொடுப்பதன் மூலம் அதை ஒருங்கிணைத்தால், ஒருவர், குற்றவாளி ஆக்கப்படுவதைத் தடுக்க முடியும் என்று உள்துறை அமைச்சர் கூறினார்.
தடய அறிவியல் தனித்து சமூகத்திற்கு சேவை செய்ய முடியாது என்று கூறிய அவர், நீதித்துறை நடைமுறையில் தடய அறிவியலை அனைத்து பங்கெடுப்பாளர்களுடனும் நாம் ஒருங்கிணைக்காவிட்டால், அதன் பலன்களை நாம் பெற முடியாது என்று கூறினார். புலனாய்வு, வழக்குத் தொடுத்தல், நீதி அமைப்பு ஆகியவற்றில் தடய அறிவியல் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய திரு ஷா, கல்வியில் அதை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஒரு படி மேலே செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார். தடுப்பு, முன்கணிப்பு மற்றும் பாதுகாப்பு காவல் பணியின் திசையில் இது ஒரு முக்கியமான நிகழ்வு என்று அவர் கூறினார். கிரிமினல் மனம் மற்றும் நடத்தை குறித்து ஆழமாக ஆய்வு செய்வதும், வரும் நாட்களில் குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்கும், குற்றவாளிகள் எழுச்சி பெறுவதைத் தடுப்பதற்கும் அதன் உத்திபூர்வமான பயன்பாடு குறித்து ஆழமாக ஆய்வு செய்வது முழு உலகிற்கும் ஒரு பெரிய சேவையாக இருக்கும். திறன் மேம்பாடு மற்றும் புலனாய்வுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் தடயவியல் சிறப்பு மையம் இன்று தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
***
ANU/SM/BS/RS/KRS
(Release ID: 1998920)
Visitor Counter : 133