தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பிஎச்ஐஎஸ்எம் நடமாடும் மருத்துவமனை அயோத்தி கோயிலில் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கிறது
Posted On:
22 JAN 2024 3:46PM by PIB Chennai
அயோத்தியில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன நடமாடும் மருத்துவமனையான பிஎச்ஐஎஸ்எம், 65 வயதான திரு ராமகிருஷ்ணா ஸ்ரீவஸ்தவாவின் உயிரைக் காப்பாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தது. பிராணப் பிரதிஷ்டை நிகழ்ச்சியின் போது திரு ஸ்ரீவஸ்தவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
பிஎச்ஐஎஸ்எம்-ஐச் சேர்ந்த குழுவினர் சம்பவம் நடந்த ஒரு நிமிடத்திற்குள் திரு ஸ்ரீவஸ்தவாவிற்கு சிகிச்சை அளித்தனர். திரு ஸ்ரீவஸ்தவாவுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில், அதன் அளவு 210/170 எம்எம்எச்ஜி-ஆக பதிவானது.
இதன் மூலம் மருத்துவக் குழுவினர் அவருக்கு சரியான சிகிச்சை அளித்ததில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.
இந்த முக்கியமான சிகிச்சை மூலம் பின்னர் அவர் மருத்துவமனையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டார்.
நடமாடும் மருத்துவமனை பிரிவுகளின் முக்கியப் பங்கை இது எடுத்துக்காட்டுகிறது.
----
(Release ID: 1998543)
ANU/SMB/IR/KPG/KRS
(Release ID: 1998670)
Visitor Counter : 90