பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐஎன்எஸ் கப்ரா இலங்கையின் கொழும்பு துறைமுகத்தைச் சென்றடைந்தது

Posted On: 09 JAN 2024 11:06AM by PIB Chennai

இந்தியக் கடற்படையின் அதிவேகத் தாக்குதல் கப்பலான ஐஎன்எஸ் கப்ரா ஜனவரி 08 அன்று இலங்கையின் கொழும்பு துறைமுகத்தைச் சென்றடைந்தது. இந்தக் கப்பலுக்கு இலங்கைக் கடற்படையினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். துறைமுக வரவேற்பின் போது, ஐஎன்எஸ் கப்ராவின் கமாண்டிங் அதிகாரி, இலங்கையின் மேற்குக் கடற்படைத் துணைத் தளபதி ரியர் அட்மிரல் டி.எஸ்.கே பெரேராவைச் சந்தித்தார்.

அப்போது நடைபெற்ற நிகழ்ச்சியில், இலங்கைக் கடற்படை மற்றும் விமானப்படைக்குத் தேவையான அத்தியாவசிய உதிரி பாகங்கள் மற்றும் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. பிரதமரின் சாகர் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இரு கடற்படைகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் தோழமையை இந்தப் பயணம் மேலும் வலுப்படுத்தும்.

***

(Release ID: 1994404)

ANU/SMB/PKV/RS/RR


(Release ID: 1994466) Visitor Counter : 140