சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சர்வதேச ஊதா திருவிழா 2024: ஒருங்கிணைப்பு மற்றும் அதிகாரமளித்தலின் உலகளாவிய கொண்டாட்டம் கோவாவில் இன்று தொடங்குகிறது
Posted On:
08 JAN 2024 10:12AM by PIB Chennai
சர்வதேச ஊதா திருவிழா - கோவா 2024-ன் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது இன்று தொடங்கி 13 –ந் தேதி வரை உள்ளடக்கம், அதிகாரமளித்தலின் துடிப்பான கொண்டாட்டத்தை விரிவுபடுத்த உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகம், கோவா அரசின் சமூக நல இயக்குநரகத்துடன் இணைந்து, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத் திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் ஆதரவுடன் ஏற்பாடு செய்துள்ள இந்த பிரமாண்டமான தொடக்க விழா பனாஜியின் கேம்பல் டி.பி மைதானத்தில் மாலை 4:30 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த தொடக்க விழாவில் கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த் சிறப்பு விருந்தினராகவும், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே கௌரவ விருந்தினராகவும் பங்கேற்கின்றனர்.
இசை, நடனம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் மாற்றுத் திறனாளிகளின் (மாற்றுத் திறனாளிகள்) சம்பவங்களை காட்சிப்படுத்துவதை இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.
கோவாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்திய இசைத் துறையைச் சேர்ந்த படைப்பாளிகளுடன் இணைந்து, 'துமால்' என்ற தலைப்பிலான ஊதா நிற கீதம் இசைக்கப்படும்.
8,000 க்கும் மேற்பட்ட உலகளாவிய பிரதிநிதிகளின் பங்கேற்புடன், சர்வதேச ஊதா திருவிழா - கோவா 2024 பன்முகத்தன்மை, உள்ளடக்கம், அதிகாரமளித்தல் ஆகியவற்றின் கொண்டாட்டமாக இருக்கும். அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கிய இந்த அசாதாரண பயணம் குறித்த புதிய தகவல்களுக்கு இணைந்திருங்கள்.
***
ANU/SM/IR/RR/KV
(Release ID: 1994102)
Visitor Counter : 175