மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
மத்திய பள்ளிக் கல்வி & எழுத்தறிவுத் துறையின் 2023ம் ஆண்டு சாதனைகள்
Posted On:
07 JAN 2024 11:26AM by PIB Chennai
முழுமையான கல்வி திட்டம்
சமக்ரசிக்ஷா எனப்படும் அனைவரையும் உள்ளடக்கிய, முழுமையான கல்வி திட்டம், பாலர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் கல்வித் துறைக்கான விரிவான திட்டமாகும். இது, 2017 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது, இது பள்ளிக் கல்விக்கான சம வாய்ப்புகள் மற்றும் சமமான கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அளவிடப்பட்ட பள்ளி செயல்திறனை மேம்படுத்தும் பரந்த குறிக்கோளுடன் அனைவருக்கும் கல்வித்திட்டம், தேசிய இடைநிலைக் கல்வி திட்டம் மற்றும் ஆசிரியர் கல்வி ஆகிய மூன்று பழைய திட்டங்களை உள்ளடக்கியது. இந்தத் திட்டம் கல்விக்கான நிலையான வளர்ச்சி இலக்குக்கு இணங்க உள்ளது.
மத்தியப் பங்கான ரூ.1,85,398.32 கோடியை உள்ளடக்கிய மொத்த நிதிச் செலவீனமான ரூ.2,94,283.04 கோடியுடன், அதாவது 2021-22 முதல் 2025-26 வரை ஐந்தாண்டு காலத்திற்கு, திருத்தப்பட்ட சமக்ரசிக்ஷா திட்டத்தைத் தொடர அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கை 2020ன் பரிந்துரையுடன் சமக்ரசிக்ஷா முழுமையாக இணைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்: (i) தேசிய கல்விக் கொள்கை 2020 பரிந்துரைகளை செயல்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆதரவு; (ii) இலவச மற்றும் கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமை சட்டம், 2009ஐ செயல்படுத்துவதில் மாநிலங்களுக்கு ஆதரவு; (iii) ஆரம்பகால குழந்தைப் பருவ பராமரிப்பு மற்றும் கல்வியில் கவனம் செலுத்துதல்; (iv) அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் கணிதத்திற்கு முக்கியத்துவம்; (v) மாணவர்களிடையே 21 ஆம் நூற்றாண்டின் திறன்களை வழங்குவதற்கு முழுமையான, ஒருங்கிணைந்த, உள்ளடக்கிய மற்றும் செயல்பாட்டு அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் மீது உந்துதல்; (vi) தரமான கல்வியை வழங்குதல் மற்றும் மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துதல்; (vii) பள்ளிக் கல்வியில் சமூக மற்றும் பாலின இடைவெளிகளைக் குறைத்தல்; (viii) பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை உறுதி செய்தல்; (ix) கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில்கள் /மாநில கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி மற்றும் பயிற்சிக்கான மாவட்ட நிறுவனங்கள் ஆகியவற்றை ஆசிரியர் பயிற்சியை செயல்படுத்தும் முகமையாக வலுப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்; (x) பாதுகாப்பான, தன்னம்பிக்கையான மற்றும் உகந்த கற்றல் சூழலை உறுதி செய்தல் மற்றும் பள்ளிக் கல்வி ஏற்பாடுகளில் தரங்களைப் பராமரித்தல் மற்றும் (xi) தொழிற்கல்வியை ஊக்குவித்தல்.
2023 ஜனவரி 1, முதல் 2023 டிசம்பர் 31, வரை மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள்:
36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு வித்யாபிரவேஷ் - எனும் 3 மாத விளையாட்டு அடிப்படையிலான 'பள்ளி சூழலுக்கு தயார்படுத்துதல் முறை' செயல்படுத்தப்பட்டது. 2023ல் இந்தத் திட்டத்தின்படி 8,45,128 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 1,01,84,529 மாணவர்கள் பயன்பெற்றனர்.
பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான முன்னேற்றத்திற்கான தேசிய முன்முயற்சி (நிஷ்தா) பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர்களை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது. பதிவுசெய்யப்பட்ட 69751 முதன்மை பயிற்சியாளர்களில், 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை 32648 பேர் சான்றிதழ் பெற்றுள்ளனர்.
சமக்ரசிக்ஷாவின் கீழ் வழங்கப்பட்ட வித்யா ஆய்வு மையத்தை நிறுவுவதற்கான ஏற்பாடு; இதுவரை, இந்த மையம் தேசிய அளவில் என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ மற்றும் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், டெல்லி, கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா, நாகாலாந்து, ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம் & உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் பயிற்சியை மறுபரிசீலனை செய்யும் நோக்கத்துடன், மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் சமக்ரசிக்ஷாவின் கீழ் துடிப்பான சிறப்புமிக்க நிறுவனங்களாக உருவாக்கப்படுகின்றன. நாட்டில் உள்ள அனைத்து 613 மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.9,195 கோடியில், சமக்ர ஷிக்ஷா மூலம் படிப்படியாக சிறந்த முறைகளாக மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 2023-24 நிதியாண்டில் தோராயமாக 120 மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
தேசிய சாதனை ஆய்வு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு, இடைக்காலத்திலும் மதிப்பீடுகளை நடத்த மாநிலங்களைச் சென்றடையும் முயற்சி. அதன்படி, 3, 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் இருந்து கற்பவர்களை உள்ளடக்கிய மாநிலக் கல்விச் சாதனை ஆய்வு நவம்பர் 2023 இல் நடத்தப்பட்டது. இந்த ஆய்வு தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைக்கப்பட்டு நடத்தப்படும்.
----
ANU/PKV/BS/DL
(Release ID: 1993931)
Visitor Counter : 193