தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் 10 கோடி பேர் பங்கேற்பு

Posted On: 05 JAN 2024 5:45PM by PIB Chennai

நமது லட்சியம் யாத்திரை இன்று ஒரு முக்கிய மைல்கல்லை கடந்துள்ளதுவெறும் 50 நாட்களில் 10 கோடிக்கும் அதிகமானோர் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்இந்த ஆச்சரியமூட்டும் எண்ணிக்கை நாடு முழுவதும் உள்ள மக்களை நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி ஒன்றிணைப்பதில் யாத்திரையின் ஆழமான தாக்கத்தையும் ஒப்பிட முடியாத திறனையும் குறிக்கிறது.

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாகனடாஜெர்மனிபிரான்ஸ், இத்தாலி மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற சில முக்கிய நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிகமாக உள்ளதுயாத்திரைக்கான ஆதரவு ஒரு  லட்சிய பாரதத்தை கட்டமைப்பதற்கான மக்களின் உறுதியான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

அருணாச்சல பிரதேசத்தின் மகுட ஆபரணமான அஞ்சாவ் முதல்குஜராத்தின் மேற்கு கடற்கரையில் உள்ள தேவ்பூமி துவாரகா வரைலடாக்கின் பனிச் சிகரங்களில் ஏறிஅந்தமானின் கடற்கரைகளை அலங்கரிப்பது வரைநமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை இப்போது அனைத்து பிராந்தியங்களையும் அரவணைத்துநாட்டின் கடைக்கோடி மூலைகளில் உள்ள சமூகங்களையும் சென்றடைகிறதுமக்கள் நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடைவதையும்மக்களுக்கு நேரடியாக பயனளிப்பதையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இந்த யாத்திரைஇந்தியாவின் பரந்து விரிந்த பகுதி முழுவதும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

2023, நவம்பர் 15, அன்று தொடங்கப்பட்டதிலிருந்து, 7.5 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் தங்கள் "லட்சியத்தை"- 2047 க்குள் ஒரு வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான உறுதியை ஏற்றுள்ளனர். இதன் மூலம் சில வாரங்களுக்குள் மக்கள் மத்தியில் நேரிட்ட யாத்திரையின் சாதகமான விளைவைக் காட்டுகிறது.

யாத்திரையின் தாக்கம் ஆழமானது மற்றும் வாழ்க்கையை மாற்றக். கூடியது. 1.7 கோடிக்கும் அதிகமான ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளனமேலும் யாத்திரையின் போது சுகாதார முகாம்களில் 2.2 கோடிக்கும் அதிகமான மக்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் நன்மைகளைப் பெற்றுள்ளனர்இந்த யாத்திரையின் போது 33 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதமரின் வேளாண் பயனாளிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கும் 87000-க்கும் மேற்பட்ட ட்ரோன் செயல்விளக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.

நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரை என்பது வெறும் பயணம் மட்டுமல்ல. இது நாடு முழுவதும் எதிரொலிக்கும் ஒரு சக்திவாய்ந்த நடவடிக்கைக்கான அழைப்பாகும்மாற்றத்தைக் கொண்டு வரவும்வளமான எதிர்காலத்தை உருவாக்கவும் இன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் உறுதியளிக்கின்றனஇந்த இயக்கம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரமளிப்பதையும், 2047 க்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான அதன் இலக்கை நெருங்க ஒரு தைரியமான தீர்மானத்தை மேற்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதுவளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணம் என்பது தனிப்பட்ட முயற்சி அல்லஅனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய கூட்டு முயற்சி என்பதை அது வலியுறுத்துகிறது.

----

(Release ID: 1993566)

ANU/AD/BS/KPG/KRS



(Release ID: 1993638) Visitor Counter : 114