ஜல்சக்தி அமைச்சகம்
14 கோடி (72.71%) கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்கும் முக்கிய மைல்கல்லை ஜல் ஜீவன் மிஷன் கடந்தது
Posted On:
05 JAN 2024 3:35PM by PIB Chennai
ஜல் ஜீவன் இயக்கம் இன்று 14 கோடி (72.71%) கிராமப்புற குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகளை வழங்கும் ஒரு முக்கியமான மைல்கல்லைக் கடந்தது. 2019, ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட்ட இந்த முன்னோடித் திட்டம் கிராமப்புறங்களுக்கு குழாய் வாயிலாக குடிநீர் இணைப்பு வழங்குவதை வெறும் நான்கு ஆண்டுகளில் 3 கோடியிலிருந்து 14 கோடியாக அதிகரித்து வேகமாக இந்த இயக்கத்தை செயல்படுத்தியுள்ளது. இந்த குறிப்பிடத்தக்க சாதனை கிராமப்புற வளர்ச்சியில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் குறிக்கிறது, இது குடிநீரின் தரத்தை உறுதி செய்தல், சமூகங்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் நிலையான நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றுக்கான இயக்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு வளர்ச்சி கூட்டமைப்புகளுடன் இணைந்து செயல்படும் ஜல் ஜீவன் இயக்கம் பல மைல்கற்களை எட்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி, கோவா, தெலுங்கானா, ஹரியானா, குஜராத், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களும், புதுச்சேரி, டாமன், டையூ, தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களும், 100% முழுமை அடைந்துள்ளன. மிசோரம் 98.68%, அருணாச்சல பிரதேசம் 98.48%, பீகார் 96.42% ஆகிய மாநிலங்கள் எதிர்காலத்தில் முழுமை அடையும் நிலையில் உள்ளன.
-----
ANU/SM/BS/KPG/KRS
(Release ID: 1993624)
Visitor Counter : 118