வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

2014-15-ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2022-23-ம் நிதியாண்டில் இந்திய விளையாட்டுப் பொருட்கள் தொழில் துறை இறக்குமதியில் 52% சரிவையும், ஏற்றுமதியில் 239% அதிகரிப்பையும் கண்டுள்ளது

Posted On: 04 JAN 2024 5:00PM by PIB Chennai

2014-15-ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது 2022-23-ம் நிதியாண்டில் இந்திய விளையாட்டுப்பொருட்கள் தொழில் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது. இறக்குமதி 52% குறைந்து, ஏற்றுமதி 239% அதிகரித்துள்ளது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் உத்தரவின் பேரில் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் நடத்திய "இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்களின் வெற்றிக் கதை" குறித்த ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

அரசின் முயற்சிகள் இந்திய விளையாட்டுப்பொருட்கள் தொழில் துறைக்கு மிகவும் உகந்த உற்பத்தி சூழலை உருவாக்க வழிவகுத்துள்ளன என்று அறிக்கை கூறுகிறது. 2014 முதல் 2020-ம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளில், இந்த அர்ப்பணிப்பு முயற்சிகள் உற்பத்தி அலகுகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கும், இறக்குமதியை 33% இருந்து 12% ஆகக் குறைப்பதற்கும், மொத்த விற்பனை மதிப்பை 10% அதிகரிப்பதற்கும், தொழிலாளர் உற்பத்தித்திறனில் ஒட்டுமொத்த உயர்வுக்கும் வழிவகுத்துள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருட்களுக்கு பூஜ்ஜிய வரி சந்தை அணுகல் ஆகியவற்றுடன், உலகளாவிய விளையாட்டுப் பொருட்கள் விநியோகத்தில் நாட்டின் ஒருங்கிணைப்பு காரணமாக இந்தியா ஒரு சிறந்த ஏற்றுமதி நாடாக உருவெடுத்து வருவதாக அறிக்கை கூறுகிறது. உலகின் தற்போதைய விளையாட்டுப்பொருட்களின் மையங்களாக திகழும், சீனா, வியட்நாமுக்கு மாற்றாக இந்தியாவை நிலைநிறுத்த, தொழில்நுட்ப முன்னேற்றங்கள், அரசின் தொடர்ச்சியான கூட்டு முயற்சிகள் அவசியமாகும். மின் வர்த்தகத்தில் ஈடுபடுதல், கூட்டாண்மைகள், ஏற்றுமதிகளை ஊக்குவித்தல், வர்த்தகக் கட்டமைப்பில் முதலீடு செய்தல், குழந்தைகளுடன் தொடர்பு கொள்ள கல்வியாளர்கள், பெற்றோருடன் ஆலோசித்தல், கலாச்சார பன்முகத்தன்மையை மதிப்பிடுதல் மற்றும் பிராந்திய கைவினைஞர்களுடன் ஒத்துழைத்தல் போன்றவை தேவையாகும் என்று கூறப்பட்டுள்ளது.

***

ANU/SM/IR/RS/KRS



(Release ID: 1993212) Visitor Counter : 101