சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

நமீபியாவைச் சேர்ந்த சிறுத்தை ஆஷாவுக்கு 3 குட்டிகள் பிறந்துள்ளன – சமூக வலைதளத்தில் படங்களை பகிர்ந்துள்ளார் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்

Posted On: 03 JAN 2024 4:43PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்குனோ தேசிய பூங்காவில் மூன்று புதிய சிறுத்தை குட்டிகள்  பிறந்துள்ள தகவலைப் பகிர்வதில் மகிழ்ச்சியடைவதாகக் கூறியுள்ளார். இந்தக் குட்டிகள் நமீபியாவைச் சேர்ந்த சிவிங்கிப்புலி வகையைச் சேர்ந்த சிறுத்தை ஆஷாவுக்கு பிறந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுப்பதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடியால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் சிறுத்தைகள் திட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தத் திட்டத்தில் பணியாற்றும் அனைத்து வல்லுநர்கள்குனோ வனவிலங்கு பூங்கா அதிகாரிகள் மற்றும் நாடு முழுவதும் உள்ள வனவிலங்கு ஆர்வலர்களுக்கு திரு பூபேந்தர் யாதவ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

----

(Release ID: 1992752)

ANU/PKV/PLM/KPG/KRS



(Release ID: 1992856) Visitor Counter : 67