பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

மகளிருக்கு அதிகாரமளித்தல் கொள்கையைப் பின்பற்றி, ஓய்வூதியம், ஓய்வூதியர் நலத் துறை, சி.சி.எஸ் (ஓய்வூதியம்) விதிகள், 2021-ஐ திருத்தி, பெண் அரசு ஊழியர் தனது கணவருக்குப் பதிலாக தனது குழந்தை / குழந்தைகள், குடும்ப ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு வாரிசாக நியமிக்க அனுமதிக்கிறது

Posted On: 02 JAN 2024 12:16PM by PIB Chennai

சி.சி.எஸ் (ஓய்வூதியம்) விதிகள், 2021-ன் விதி 50 -ன் துணை விதி (8) மற்றும் துணை விதி (9) ஆகியவற்றின் விதிகளின்படி, காலமான அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரரின் வாழ்க்கைத் துணை உயிர் வாழ்ந்திருந்தால், குடும்ப ஓய்வூதியம் முதலில் மனைவிக்கு வழங்கப்படுகிறது. மேலும் காலமான அரசு ஊழியர்/ ஓய்வூதியதாரரின் வாழ்க்கைத் துணை குடும்ப ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவராக மாறிய பின்னரே, குழந்தைகள், பிற குடும்ப உறுப்பினர்கள் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள்.

ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத் துறை, ஒரு பெண் அரசு ஊழியர்/பெண் ஓய்வூதியர் தனது கணவருக்குப் பதிலாக தனது தகுதியான குழந்தை/குழந்தைகளை குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு வாரிசாக  நியமிக்க அனுமதிக்க முடியுமா அல்லது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ், வழக்குத் தொடர முடியுமா என்பது குறித்து ஆலோசனை கோரி வருகிறது. அதன்படி, அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனைகளுக்குப் பிறகு, ஒரு பெண் அரசு ஊழியர்/பெண் ஓய்வூதியதாரர் தொடர்பான விவாகரத்து நடவடிக்கைகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அல்லது பெண் அரசு ஊழியர்/பெண் ஓய்வூதியதாரர் தனது கணவர் மீது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் அல்லது வரதட்சணை தடுப்புச் சட்டம் அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்திருந்தால், அத்தகைய பெண் அரசு ஊழியர் / பெண் ஓய்வூதியம் பெறுபவர் தனது மரணத்திற்குப் பிறகு தனது கணவருக்குப் பதிலாக தனது தகுதியான குழந்தை / குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்குமாறு கோரலாம், அத்தகைய கோரிக்கை பின்வரும் முறையில் பரிசீலிக்கப்படலாம்:

ஒரு பெண் அரசு ஊழியர்/பெண் ஓய்வூதியர் தொடர்பாக, விவாகரத்து நடவடிக்கைகள் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அல்லது பெண் அரசு ஊழியர் / பெண் ஓய்வூதியதாரர் தனது கணவருக்கு எதிராக குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் அல்லது வரதட்சணை தடுப்புச் சட்டம் அல்லது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்திருந்தால், மேற்கூறிய பெண் அரசு ஊழியர் / பெண் ஓய்வூதியதாரர், மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் நிலுவையில் இருக்கும்போது அவர் இறந்துவிட்டால், அவரது கணவருக்குப் பதிலாக அவரது தகுதிவாய்ந்த குழந்தை / குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படலாம் என்று சம்பந்தப்பட்ட அலுவலகத் தலைவருக்கு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுக்கலாம்.

***

(Release ID: 1992303)

ANU/PKV/IR/RS/KRS



(Release ID: 1992432) Visitor Counter : 222