கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டு சாதனைகள்
Posted On:
02 JAN 2024 10:28AM by PIB Chennai
உலக வங்கியின் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டெண் அறிக்கை - 2023 ஏப்ரல் 2023-ல் வெளியிடப்பட்டது
சர்வதேச ஏற்றுமதி பிரிவில், 2014ல், 44வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது, 22-வது இடத்தைப் பிடித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு 4 நாட்கள், அமெரிக்காவுக்கு 7 நாட்கள் மற்றும் ஜெர்மனிக்கு 10 நாட்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது சராசரி கப்பல் தங்கும் நேரம் 3 நாட்கள் மட்டுமே என்ற நிலையை எட்டியுள்ளது.
இந்திய துறைமுகங்கள் "சரக்கு கையாளும் திறன் காலம்" 0.9 நாட்களை எட்டியுள்ளது, இது அமெரிக்கா (1.5 நாட்கள்), ஆஸ்திரேலியா (1.7 நாட்கள்), சிங்கப்பூர் (1.0 நாட்கள்) போன்றவற்றை விட சிறந்த திறனைக் கொண்டதாகும்.
கடல்சார் அமிர்த காலத் தொலைநோக்கு திட்டம் 2047
ரூ.80,000 லட்சம் கோடி முதலீட்டில் உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சிமாநாட்டின்போது தொடங்கப்பட்ட விரிவான செயல்திட்டத்துடன் இந்தியாவின் கடல்சார் துறை மாற்றமடைய உள்ளது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்ட அமிர்த கால தொலைநோக்கு திட்டம் 2047, கடல்சார் இந்தியா தொலைநோக்கு 2030-ஐ உருவாக்குகிறது. உலகத் தரம் வாய்ந்த துறைமுகங்களை மேம்படுத்துவதையும், உள்நாட்டு நீர் போக்குவரத்து, கடலோர கப்பல் போக்குவரத்து மற்றும் நிலையான கடல்சார் துறையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது சரக்குப் போக்குரவத்து, உள்கட்டமைப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகியவற்றில் உள்ள இலக்குகளை உள்ளடக்கியது, இது இந்தியாவின் 'நீலப் பொருளாதாரத்தை' ஆதரிக்கிறது. பல்வேறு தரப்பினருடன் 150-க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் மற்றும் 50 சர்வதேச அளவுகோல்களின் பகுப்பாய்வு மூலம் வடிவமைக்கப்பட்ட இந்தத் தொலைநோக்கு, 2047 க்குள் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகளை மேம்படுத்துவதற்கான 300-க்கும் மேற்பட்ட செயல்பாட்டு முன்முயற்சிகளைச் சுட்டிக் காட்டுகிறது.
உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு, 2023
எம்.ஓ.பி.எஸ்.டபிள்யூ ஏற்பாடு செய்த கடல் சார் இந்தியா உச்சி மாநாடு (ஜி.எம்.ஐ.எஸ் 2023), மும்பையில் இதுவரை நடத்தப்பட்ட மிகப்பெரிய உச்சிமாநாடு ஆகும். பிரதமர் இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்து, 'கடல்சார் அமிர்த கால தொலைநோக்கு திட்டம் 2047'-ஐ தொடங்கி வைத்தார். 10 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதிநிதிகள், வர்த்தகப் பிரதிநிதிகள் மற்றும் 42 நாடுகளைச் சேர்ந்த கண்காட்சியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரூ.8.35 லட்சம் கோடி மதிப்பிலான 360 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, ரூ.1.68 லட்சம் கோடி மதிப்பிலான கூடுதல் முதலீட்டு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்த உச்சிமாநாட்டில் மொத்தம் ரூ.14,440 கோடி மதிப்பிலான 11 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார், மேலும் ரூ.8,924 கோடிமதிப்புள்ள 11 திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
4. தேசிய சரக்குப் போக்குவரத்து இணைய தளம் தொடக்கம்
தேசிய சரக்குப் போக்குவரத்து இணைய தளம் (கடல்சார்) ஜனவரி 27, 2023 அன்று துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழித்துறை அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. சரக்குப் போக்குவரத்து இணைய தளம் செலவுகள் மற்றும் நேர தாமதங்களைக் குறைக்கும் அதே நேரத்தில் செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீர்வழிகள், சாலைகள் மற்றும் வான்வழிகள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து முறைகளையும் இது உள்ளடக்கியுள்ளது.
துறைமுகங்களின் செயல்திறன்
நடப்பு நிதியாண்டில் முக்கிய துறைமுகங்கள் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட முக்கிய சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
பசுமை துறைமுக வழிகாட்டு நெறிமுறைகள் 2023 தொடக்கம்; பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைவதற்கான பரந்த தொலைநோக்கு பார்வையை பூர்த்தி செய்வதற்காக, 10.05.2023 அன்று 'ஹரித் சாகர்' என்ற பசுமை துறைமுக வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தீனதயாள் துறைமுகம், விசாகப்பட்டினம் துறைமுகம், புது மங்களூர் துறைமுகம் மற்றும் வ.உ.சி துறைமுகம் ஆகிய நான்கு பெரிய துறைமுகங்கள் ஏற்கனவே அவற்றின் தேவையை விட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்து வருகின்றன.
பிப்ரவரி, 2023-ல் அனுமதிக்கப்பட்ட திட்டங்கள்:
ஜே.என்.பி.ஏ மருத்துவமனையை 100 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்துதல் - ரூ.48 கோடி
தீனதயாள் துறைமுகத்தில் 4.2 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பல்நோக்கு தூய்மையான சரக்குகளைக் கையாள்வதற்கான பெர்த் எண்.13 மேம்பாடு - ரூ. 167 கோடி
வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உலர் சரக்குகளைக் கையாள்வதற்காக வடக்கு சரக்கு பெர்த்-3 (என்.சி.பி-3) இயந்திரமயமாக்கல் - ரூ.265 கோடி
கோவாவின் மோர்முகாவ் துறைமுகத்தில் பெர்த் எண் 10 மற்றும் 11-ஐ இயக்குதல் மற்றும் பராமரித்தல் - ரூ. 139 கோடி
மும்பை துறைமுக ஆணையத்தின் பிரின்ஸ் டாக்கில் மும்பை மெரினா மேம்பாடு - 575.19 கோடி
தீனதயாள் துறைமுக ஆணையத்தின் எண்ணெய் இறங்குதளம் எண்.09 மேம்பாடு - 123 கோடி
பிப்ரவரி, 2023-ல் சாகர்மாலாவின் கீழ் அனுமதிக்கப்பட்ட திட்டங்கள்:
ஆந்திராவில் ஒரு கடலோர துறைமுகத் திட்டம் - ரூ.73.07 கோடி மற்றும் 3 மீன்பிடி துறைமுகத் திட்டங்கள் - ரூ.1,137 கோடி
கர்நாடகாவில் 5 மிதக்கும் படகுத்துறை திட்டங்கள் - ரூ.15.99 கோடி மற்றும் 1 உள்நாட்டு நீர்வழி திட்டம் - ரூ.9.54 கோடி
தமிழ்நாட்டில் 2 மிதக்கும் படகுத்துறை திட்டங்கள் - ரூ.14.66 கோடி
சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.77 கோடி செலவில் நிறுவப்பட்ட துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடற்கரைகளுக்கான தேசிய தொழில்நுட்ப மையத்தின் டிஸ்கவரி வளாகம் 24.04.2023 அன்று திறக்கப்பட்டது.
***
PKV/BS/AG/KV
(Release ID: 1992377)
Visitor Counter : 150