பாதுகாப்பு அமைச்சகம்

வடக்கு அரபிக்கடல் மத்திய அரபிக்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் இந்தியக் கடற்படைக் கண்காணிப்பை அதிகரிக்கிறது

Posted On: 31 DEC 2023 12:46PM by PIB Chennai

கடந்த சில வாரங்களாக செங்கடல், ஏடன் வளைகுடா,  மத்திய மற்றும் வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் சர்வதேசக் கப்பல் பாதைகள் வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கான அச்சுறுத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தியக் கடற்கரையில் இருந்து சுமார் 700 கடல் மைல் தொலைவில் எம்.வி.ரூன் கப்பலில் நடந்த கடற்கொள்ளை சம்பவம் மற்றும் போர்பந்தருக்கு தென்மேற்கே சுமார் 220 கடல் மைல் தொலைவில் எம்.வி.கெம் புளூட்டோ கப்பல் மீதான ட்ரோன் தாக்குதல் ஆகியவை இந்தியப் பொருளாதார மண்டலத்திற்கு நெருக்கமான கடல் பகுதிகளில் நடந்தவையாகும்.

 

இந்த சம்பவங்களுக்குப் பின்னர், இந்தியக் கடற்படை மத்திய மற்றும் வடக்கு அரபிக் கடலில் கடல் கண்காணிப்புப் பணிகளைக் கணிசமாக அதிகரித்துள்ளது. கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் வணிகக் கப்பல்களுக்கு உதவுவதற்கும் போர்க்கப்பல்கள் அடங்கிய பணிக்குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நீண்ட தூரக் கடல் ரோந்து விமானங்கள் மற்றும் ரோபோ கண்காணிப்பு முறை மூலம் வான்வழிக் கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டு முழுமையான கடல்சார் பாதுகாப்புச் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களைத் திறம்பட கண்காணிக்கும் வகையில், இந்தியக் கடற்படை, கடலோர காவல்படையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

 

ஒட்டுமொத்த நிலைமையை இந்தியக் கடற்படை, தேசிய கடல்சார் அமைப்புகளுடன் இணைந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. பிராந்தியத்தில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியக் கடற்படை உறுதிபூண்டுள்ளது.

 

******

(Release ID: 1991900) 

 SMB/PLM/KRS                

 



(Release ID: 1991949) Visitor Counter : 97