நிதி அமைச்சகம்

நிதியமைச்சகத்தின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள்: பொது நிறுவனங்கள் துறை

Posted On: 27 DEC 2023 3:11PM by PIB Chennai

2023-ம் ஆண்டில், பொது நிறுவனங்கள் துறை பல்வேறு முக்கிய துறைகளில் பொருளாதார வளர்ச்சி, செயல்திறனை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் முதலீட்டு செலவினங்களை கண்காணிப்பது, மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டு  மதிப்பீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான தகவல் பலகையை அமல்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்றுக்கொள்வது, பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் கீழ், கொள்முதல்  மேம்பாடுகளை உறுதி செய்வது ஆகியவற்றில்  பொதுத்துறை நிறுவனங்கள் துறை கவனம் செலுத்தியுள்ளது.

2023-ம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொது நிறுவனங்கள் துறையின் சில முக்கிய சாதனைகள் பின்வருமாறு:

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு அறிவித்துள்ள ஆதரவு நடவடிக்கைகளுக்கு ஏற்ப, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்  அரசு மின் சந்தை மூலம் கொள்முதல் செய்வது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் சுமார் 2.7 மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் சிறு, குறு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வது 2023 நவம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட 10 சதவீதம் அதிகமாக உள்ளது.

•     2023-24-ம் நிதியாண்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளின் முதலீட்டு செலவை பொது நிறுவனங்கள் துறை கண்காணித்து வருகிறது. மதிப்பிடப்பட்ட செலவீனமாக ரூ.7.33 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2023 நவம்பர் 30 நிலவரப்படி 66.61 சதவீதமாக அதாவது ரூ.4.88 லட்சம் கோடியாக இருந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1990744

--------------

ANU/PKV/IR/RS/KV



(Release ID: 1991535) Visitor Counter : 66