சுற்றுலா அமைச்சகம்

2023-ம் ஆண்டில் சுற்றுலா அமைச்சக செயல்பாடுகள்:

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஜி20 சுற்றுலா பணிக் குழு மற்றும் சுற்றுலா அமைச்சக மட்டத்திலான கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன

கோவா செயல்திட்டம், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறைக்கான பயணத் திட்டம் ஆகியவற்றுக்கு ஜி20 உறுப்பு நாடுகள், பார்வையாளர் நாடுகள் ஆகியவற்றின் முழுமையான அங்கீகாரம்

வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுலா வாய்ப்புகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மட்டத்தில் வெளிப்படுத்தும் வகையில், மேகாலயா-வின் ஷில்லாங்கில் பசுமை நிகழ்ச்சியாக 11-வது சர்வதேச சுற்றுலா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

இயற்கையுடன் கூடிய நீடித்த நடைமுறைகளை பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா வர்த்தகர்கள் பின்பற்றும் வகையில், “சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறைக்கான பயணம்” திட்டத்தின் சர்வதேச அளவிலான நடைமுறை தொடக்கம்

சர்வதேச அரங்கில் திருமண நிகழ்ச்சிகளுக்கான முதன்மையான இடமாக இந்தியா இருப்பதை எடுத்துரைக்கும் வகையில் திருமண சுற்றுலா பிரசார இயக்கம் தொடக்கம்

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற கருத்துரு அடிப்படையில் செங்கோட்டையில் “பாரத திருவிழா” நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

பல்வேறுபட்ட கலாச்சாரங்களை வெளிப்படுத்தும் வகையில

Posted On: 21 DEC 2023 2:20PM by PIB Chennai

2023-ம் ஆண்டில் சுற்றுலா அமைச்சகம் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள்/ நிகழ்ச்சிகள்/ சாதனைகளைப் பார்க்கலாம்:

4 இடங்களில் சுற்றுலா பணிக் குழு மற்றும் சுற்றுலா அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டங்களுக்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்தது. அதாவது, கட்ச்-சின் ரான் பகுதி, சிலிகுரி/டார்ஜிலிங், ஸ்ரீநகர், கோவா-வின் பனாஜி ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சுற்றுலா திறனை உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் வெளிப்படுத்தும் வகையில், மேகாலயாவின் ஷில்லாங்-கில் 11-வது சர்வதேச சுற்றுலாக் கண்காட்சிக்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்தது.

உலக சுற்றுலா தினத்தையொட்டி, செப்டம்பர் 27, 2023-ல் சுற்றுலாத் துறையில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறைக்கான பயணம்திட்டத்தை சர்வதேச அளவில் சுற்றுலா அமைச்சகம் தொடங்கியது. இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறைஇயக்கத்தின்கீழ், சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போர் இயற்கையுடன் கூடிய நீடித்த நடைமுறைகளை பின்பற்றுவதற்கு வழிவகை செய்கிறது.

இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கான ஆண்டாக 2023-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மிகப்பெரும் சர்வதேச ஆதார சந்தைக்கான தனித்துவமான இடமாக இந்தியாவை நிலைநிறுத்தும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுற்றுலாத் துறையை தீவிர நடவடிக்கைகள் மூலம் மேம்படுத்த வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில், சர்வதேச அரங்கில் இந்தியாவை முதன்மையான திருமண நிகழ்ச்சிக்கான இடம் என்பதை வெளிப்படுத்தும் வகையில், முதன்மையான பிரச்சாரத்தை சுற்றுலா அமைச்சகம் தொடங்கியது.

சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜனவரி 26-31, 2023-ல் புதுதில்லியில் உள்ள செங்கோட்டை புல்வெளியில், பாரத திருவிழா என்ற 6 நாள் நிகழ்ச்சிக்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்தது.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பு (FICCI), சுற்றுலா துறை, ராஜஸ்தான் அரசு ஆகியவற்றுடன் இணைந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஜி20 சுற்றுலாக் கண்காட்சியை சுற்றுலா அமைச்சகம் நடத்தியது. 12-வது மாபெரும் இந்திய சுற்றுலாச் சந்தைநிகழ்ச்சியுடன் சேர்த்து ஏப்ரல் 23 முதல் 25 வரை இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டது.

ஆந்திரப்பிரதேசத்தின் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் டிசம்பர் 10 முதல் 12 வரை கிருஷ்ணவேணி சங்கீத நீராஜனம் நிகழ்ச்சிக்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்தது.

ஆன்மிக தலங்களை புதுப்பிப்பது மற்றும் ஆன்மிக, பாரம்பரியத்தை மேம்படுத்தும் நடவடிக்கை (பிரஷாத்) திட்டத்தின்கீழ், 26 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் ஒட்டுமொத்தமாக ரூ.1,629.15 கோடி மதிப்பிலான 46 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்கீழ், 17 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மேம்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக 26 புதிய இடங்கள் கண்டறியப்பட்டன.

சுற்றுலாப் பகுதிகளை ஒருங்கிணைந்து மேம்படுத்துவதற்கான சுதேஷ் தர்ஷன் 2.O திட்டத்தின்கீழ், மேம்பாட்டுக்காக 32 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 55 இடங்கள் அடையாளம் காணப்பட்டன.

 

*****

PKV /SK/KRS

(Release ID: 1989088)



(Release ID: 1991276) Visitor Counter : 63