உள்துறை அமைச்சகம்
பண்டிட் ஜஸ்ராஜின் இசைத் திருவிழாவான 'பண்டிட் மோதிராம் பண்டிட் மணிராம் இசை நிகழ்ச்சியின்
50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில், நினைவு தபால் தலையை மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா புதுதில்லியில் இன்று வெளியிட்டார்
Posted On:
27 DEC 2023 7:11PM by PIB Chennai
பண்டிட் ஜஸ்ராஜின் இசைத் திருவிழாவான 'பண்டிட் மோதிராம் பண்டிட் மணிராம் இசை நிகழ்ச்சியின் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் நினைவு தபால் தலையை, மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு. அமித் ஷா புதுதில்லியில் இன்று வெளியிட்டார். இந்த நினைவு தபால்தலை மத்திய அரசின் தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டது.
அப்போது பேசிய திரு அமித் ஷா, பண்டிட் ஜஸ்ராஜ் அவர்கள் 80 வருடங்களுக்கு மேலாக இந்திய பாரம்பரிய, புஷ்திமார்க்கிய இசை, வைணவ பாரம்பரியத்தின் பக்தி பாடல் ஆகியவற்றை உலகம் முழுவதும் உள்ள இசை பிரியர்களுக்காக உருவாக்கியுள்ளார் என்று கூறினார். பண்டிட் ஜஸ்ராஜ் மிகவும் பக்தியுடன் பஜனை பாடல் பாடுவார் என்றும், இதனால் பகவான் கிருஷ்ணரின் உருவம் பார்வையாளர்கள் முன் உயிர்ப்புடன் வரும் என்றும் அவர் கூறினார். அதனால்தான் உலகெங்கிலும் உள்ள மக்கள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள் என்று உள்துறை அமைச்சர் கூறினார். இந்திய பாரம்பரிய, பக்தி இசையை வலுப்படுத்துவதில் அவரது பங்களிப்பை இந்தியா ஒருபோதும் மறக்க முடியாது என்று திரு ஷா கூறினார். இன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, அவரது நினைவாக ஒரு தபால் தலையை வெளியிடுவதன் மூலம் அவரது பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளதாக திரு அமித்ஷா தெரிவித்தார்.
இந்த தபால் தலை வெளியீட்டு விழாவில், பண்டிட் ஜஸ்ராஜின் மகள் திருமதி துர்கா ஜஸ்ராஜ், பண்டிட் மணிராமின் மகனும், பண்டிட் மோதிராமின் பேரனுமான பண்டிட் தினேஷ் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 1991014)
ANU/AD/IR/AG/KRS
(Release ID: 1991059)