ஊரக வளர்ச்சி அமைச்சகம்

நீர் வடிநிலப்பகுதி திட்டங்களில் பசுமை பொருளாதாரத்திற்கான கற்றாழை குறித்த ஒரு நாள் தேசிய பயிலரங்கு; மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் உரை

Posted On: 23 DEC 2023 3:09PM by PIB Chennai

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் புதுதில்லியில் நேற்று "நீர் வடிநிலப்பகுதி திட்டங்களில் பசுமைப் பொருளாதாரத்திற்கான கற்றாழை" என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய பயிலரங்கில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்.

கற்றாழை சாகுபடியை ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக, நில வளத்துறை "நீர் வடிநிலப்பகுதி திட்டங்களில் பசுமை பொருளாதாரத்திற்கான கற்றாழை" என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய செயலமர்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

கள்ளிச்செடி வளர்ப்பு மற்றும் அதன் பொருளாதாரப் பயன்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு சூழல் அமைப்பை உருவாக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துமாறு மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் அனைத்து பிரதிநிதிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

பின்தங்கிய மற்றும் முன்னோக்கிய இணைப்புகளை எளிதாக்குவதன் மூலம் கற்றாழை சாகுபடி மற்றும் அதன் பொருளாதாரப் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்காக வல்லுநர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், சிந்தனைக் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரசின் பல்வேறு கருத்துக்களை ஒருங்கிணைக்க இந்தப் பயிலரங்கு உதவியது.

பிரதமரின் வேளாண் நீர்பாசனத் திட்டத்தின் நீர் வடிநிலப்பகுதி மேம்பாட்டு கூறு திட்டம் பல்வேறு வகையான பொருத்தமான சாகுபடியை தேர்ந்தெடுப்பதை  அனுமதிக்கிறது, இது மானாவாரி / தரிசு  நிலங்களை மீட்டெடுக்க உதவுகிறது. கற்றாழை கடினமான தாவர இனமாகும்,  அதன் வளர்ச்சி மற்றும் உயிர்வாழ்வதற்கு மிகக் குறைந்த மழை மட்டுமே தேவைப்படுகிறது. இதன்படி, எரிபொருள், உரம், தீவனம், தோல், உணவு போன்றவற்றின் பயன்களை உணர்ந்து, நாட்டின் நலனுக்காகவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காகவும், மானாவாரி மற்றும் தரம் குறைந்த நிலங்களில் கற்றாழை சாகுபடியை மேற்கொள்வதற்கான பல்வேறு அம்சங்களை நிலவளத்துறை ஆராய்ந்து வருகிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில், கற்றாழை சாகுபடி மற்றும் அதன் பொருளாதார பயன்பாடுகளை பிரதமரின் வேளாண் நீர்பாசனத் திட்டத்தின் நீர் வடிநிலப்பகுதி மேம்பாட்டு கூறு 2.0 இன் கீழ் ஊக்குவிப்பதில் ஒத்துழைப்பு குறித்து ஐ.சி.ஏ.ஆர், ஐ.சி.ஏ.ஆர்.டி.ஏ மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

*******


ANU/PKV/BS/DL



(Release ID: 1989976) Visitor Counter : 67