சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தின் 2023-ம் ஆண்டு செயல்பாடுகள் மற்றும் சாதனைகள்
Posted On:
22 DEC 2023 3:56PM by PIB Chennai
சிறுபான்மை சமூகங்களான சமணர்கள், பார்சிகள், பௌத்தர்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக 2006-ம் ஆண்டில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் நிறுவப்பட்டது. நமது தேசத்தின் பல இன, பல கலாச்சார, பல மொழி மற்றும் பல மதத் தன்மையை வலுப்படுத்துவதற்கான சூழலை உருவாக்க இந்த அமைச்சகம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார நடவடிக்கைகளில் சிறுபான்மை சமூகங்களுக்கு உரிய பங்களிப்பை வழங்குவதற்கும் அவர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் இந்த அமைச்சகம் பல திட்டங்களைச் செயல்படுத்துகிறது.
2023-ம் ஆண்டில் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய சாதனைகள் பின்வருமாறு:
• பிரதமரின் விகாஸ் திட்டத்தை சிறுபான்மையினர் நல அமைச்சகம் உருவாக்கியுள்ளது, இது இந்த அமைச்சகத்தின் தற்போதைய ஐந்து திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுகிறது. சிறுபான்மையினரின் வாழ்வாதார வாய்ப்புகளை மேம்படுத்துவதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது.
• பிரதமரின் விகாஸ் திட்டம், திறன் மற்றும் பயிற்சி, கடன் ஆதரவுடன் தொழில்முனைவோர் அம்சம், பள்ளி இடைநிற்றல் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மற்றும் சிறுபான்மையினர் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அம்சம் என நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டது.
• பிரதமரின் விகாஸ் திட்டத்தின் கீழ் 9,63,448 பயனாளிகளுக்கு அமைச்சகம் பயிற்சி அளித்துள்ளது
• பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம்: பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் (பி.எம்.ஜே.வி.கே) என்பது மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இத்திட்டம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
• 2022-23 ஆம் ஆண்டில், பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் பள்ளிக் கட்டடங்கள், உறைவிடப் பள்ளிகள், விடுதிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், திறன் மையங்கள், மருத்துவமனைகள், சுகாதார மையங்கள், சத்பவ் மண்டபம், சமுதாயக் கூடம், விளையாட்டு வளாகம் போன்ற விளையாட்டுத் திட்டங்கள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள் போன்றவை அடங்கும்.
• சிறுபான்மையினர் நல அமைச்சகம், இஸ்ரோவின் தேசிய தொலையுணர்வு மையத்துடன் இணைந்து பிரதமரின் ஜன் விகாஸ் காரியக்ரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட உள்கட்டமைப்பை ஜியோ டேக்கிங் செய்யத் தொடங்கியுள்ளது.
• தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் (என்.எம்.டி.எஃப்.சி.): தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதிக் கழகம் (என்.எம்.டி.எஃப்.சி) இந்திய அரசின் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒரு அரசு நிறுவனமாகும். இக்கழகம் சிறுபான்மை சமூகங்களில் பின்தங்கியுள்ள பிரிவினரின் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்டுள்ளது.
• என்.எம்.டி.எஃப்.சி. மூலம் 2022-23ஆம் நிதியாண்டில் 2.05 இலட்சம் பயனாளிகளுக்கு ரூ. 881.70 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில் 1.60 லட்சம் பயனாளிகளுக்கு ரூ. 700.00 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
• ஹஜ் யாத்திரை 2023: வெளியுறவு அமைச்சகம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், சுகாதார அமைச்சகம், இந்திய ஹஜ் குழு மற்றும் ஹஜ் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பிற தரப்பினருடன் இணைந்து சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஹஜ் புனித யாத்திரைப் பணிகளை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தது.
• முதல் முறையாக, தனியாக பெண்கள் ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனர்.
• 2023 ஹஜ் புனிதப் பயணத்தில் அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் இருந்த 500 இடங்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, தகுதியான மக்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டன.
• இந்திய ஹஜ் பயணிகள் தங்குவதற்காக மக்காவில் அடிப்படை வசதிகள் மற்றும் பிற வசதிகளுடன் கூடிய மொத்தம் 477 கட்டடங்கள் வாடகைக்கு விடப்பட்டன.
• ஹஜ் பயணிகளுக்கு சிறந்த சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்காக, சுகாதார அமைச்சகம் மற்றும் அதன் முகமைகள், மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களைத் தேர்ந்தெடுத்து பணியமர்த்துவதில் நேரடியாக ஈடுபட்டன.
• ஹஜ்-2023-ன் போது சிறுபான்மயினர் நல அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட பின்னூட்ட இணையதளத்தில் 25000 க்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகளிடம் இருந்து கருத்துகள் பெறப்பட்டுள்ளன. இது அடுத்தடுத்த ஆண்டுகளில் வசதிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கு உதவும்.
• தகவல் தொழில்நுட்ப நடைமுறைகள் மேம்படுத்த சிறுபான்மையினர் நல அமைச்சகத்தால் பல முன்முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த அமைச்சகத்தின் திட்டங்கள் தொடர்பாக இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
• சீகோ அவுர் கமாவோ என்ற பெயரில் சிறுபான்மையினருக்குத் திறன் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
• நய் ரோஷினி என்ற பெயரில் சிறுபான்மையின சமூகப் பெண்களின் தலைமைப் பண்பு மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
• நய் மன்சில் என்ற பெயரில் சிறுபான்மை சமூகங்களுக்கான ஒருங்கிணைந்த கல்வி மற்றும் வாழ்வாதார முன்முயற்சி செயல்படுத்தப்படுகிறது.
• சிறுபான்மை சமூகங்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் கைவினைப்பொருட்களைப் பாதுகாப்பதற்கான திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் திட்டம் உஸ்ட்டாட் (USTTAD) திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
• நயா சவேரா என்ற திட்டத்தின் கீழ் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
• சீகோ அவுர் கமாவோ, நய் ரோஷினி, நய் மன்சில், நயா சவேரா போன்ற திட்டங்களுக்கு தனி இணையதளங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
*******
ANU/PKV/PLM/DL
(Release ID: 1989955)
Visitor Counter : 203