ஜனநாயகத்தின் அடித்தளமே தேர்தல் நடைமுறையில் அனைத்து சமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதில் உள்ளது. மாற்றுத் திறனாளிகள் சமமாகப் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அணுகக்கூடிய மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல்கள் ஒரு சமரசமற்ற அடிப்படையாகும்.
முதல் முறையாக, மாற்றுத் திறனாளிகள் மீதான அரசியல் உரையாடலில் ஒருங்கிணைப்பையும் மரியாதையையும் ஊக்குவிக்கும் வகையில், அரசியல் கட்சிகள், அவற்றின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களின் தொகுப்பை வழங்கியுள்ளது.
அரசியல் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் தேர்தல் செயல்முறையில் ஒரு முக்கிய பங்குதாரராக இருப்பதால் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
மாற்றுத் திறனாளிகள் குறித்த அரசியல் உரையாடலில் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. எந்தவொரு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் அல்லது அவர்களின் வேட்பாளர்களும் பேச்சு/ பிரச்சாரத்தில் இத்தகைய சொற்களைப் பயன்படுத்துவது மாற்றுத் திறனாளிகளை அவமதிப்பதாகும். ஊமை (குங்கா), மனவளர்ச்சி குன்றியவர்கள் (பாகல், சிர்பிரா), பார்வையற்றவர்கள் (அந்தா, கானா), காது கேளாதோர் (பெஹ்ரா), நொண்டி (லங்டா, லூலா, அபாஹிஜ்) போன்ற சொற்கள் மாற்றுத் திறனாளிகளை அவமதிப்பதாகும். இது போன்ற இழிவான வார்த்தைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டியது அவசியம். மாற்றுத் திறனாளிகளுக்கு அரசியல் பேச்சு/ பிரச்சாரத்தில் நீதியும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.
வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
அரசியல் கட்சிகளும் அவற்றின் பிரதிநிதிகளும் தங்கள் எழுத்துகள் / கட்டுரைகள் / தொடர்பு பொருட்கள் அல்லது அரசியல் பிரச்சாரத்தின் போது மாற்றுத்திறனாளிகள் குறித்த தவறான / அவதூறான / அவமதிக்கும் குறிப்புகளைப் பயன்படுத்தக்கூடாது.
அரசியல் கட்சிகளும், அவற்றின் பிரதிநிதிகளும் பொதுப் பேச்சிலோ, கட்டுரைகளிலோ, அரசியல் பிரச்சாரத்திலோ மனித இயலாமையின் பின்னணியில் ஊனமுற்றோர்/ மாற்றுத் திறனாளிகளைக் குறிக்கும் சொற்களைப் பயன்படுத்தக் கூடாது.
மாற்றுத் திறனாளிகள் தொடர்பான கருத்துகளை அரசியல் கட்சிகளும், அவற்றின் பிரதிநிதிகளும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகள் மீதான மொழி, கலைச்சொற்கள், சூழல், கேலி, அவதூறான குறிப்புகள் அல்லது அவமதிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்துவது மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டத்திற்கு எதிரானது.
***
(Release ID: 1989125)
ANU/SMB/IR/RR/KRS