குடியரசுத் தலைவர் செயலகம்

குடியரசுத் தலைவர் மாளிகையில் பல்வேறு சுற்றுலா காட்சிகளைக் குடியரசுத்தலைவர் திறந்து வைத்தார்

Posted On: 21 DEC 2023 2:14PM by PIB Chennai

குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (டிசம்பர் 21, 2023) குடியரசுத் தலைவர் மாளிகையில் பல்வேறு சுற்றுலா காட்சிகளைத் திறந்து வைத்தார். அவற்றில் பின்வருவன அடங்கும்:

- வரலாற்றுச் சிறப்புமிக்க கொடிமரத்தின் வடிவப் பிரதி;

- மேஸ் கார்டன், குழந்தைகள் பூங்கா;

- படி கிணறுகள், பாரம்பரிய நீர்ப்பாசன முறை மீட்டுருவாக்கம்;

- பாறை நீர் அருவியில் சிவன், நந்தி சிற்பங்கள்;

- அறிவுக் கூடத்தில் புதிய பகுதிகளைச் சேர்த்தல்.

தேக்கு மரத்தால் செய்யப்பட்ட 36 மீட்டர் (120 அடி) உயரக் கொடிமரம், 1948 ஆம் ஆண்டில் ஐதராபாத் மாகாணத்தை இந்தியாவுடன் ஒருங்கிணைத்ததைக் குறிக்கிறது. சிறுவர் பூங்கா இளம் பார்வையாளர்களை ஈர்க்க அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று படிக் கிணறுகளைப் புனரமைப்பதன் மூலம் ஆண்டுதோறும் கணிசமான அளவு மழைநீர் சேமிக்கப்படும். இது நீர் பாதுகாப்பு மற்றும் உள்ளூர் வளத்தை அதிகரிக்கும், அதே நேரத்தில் பாரம்பரிய நீர்ப்பாசன அமைப்புகள் பாரம்பரியத்தைப் பற்றி பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

ஆலமரத்தடியில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் தட்சிணாமூர்த்தி சிவனும், பாறையின் மீது நந்தி காளையும் அமர்வது பார்வையாளர்களை ஈர்க்கும்.

அறிவுக்கூடத்தில் இரண்டு புதிய பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன - ஒன்று ஐதராபாதின் ஒருங்கிணைப்பு பற்றிய தகவல்களை வழங்குகிறது, மற்றொன்று குடியரசுத்தலைவர் மாளிகை, மற்றும் குடியரசுத்தலைவர்களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

அறிவுக்கூடத்திற்கு வெளியே உள்ள பாறை ஓவியங்கள் "ஒரே பாரதம் உன்னத பாரதம்" – அறிவியல், பாதுகாப்பு சாதனைகள், பாரம்பரியம், பல்வேறு நினைவுச்சின்னங்கள், கலை வடிவங்களின் பல்வேறு அம்சங்களை சித்தரிக்கின்றன.

குடியரசுத்தலைவர் மாளிகையின் தென்பகுதியைத் தவிர ஆண்டு முழுவதும் குடியரசுத்தலைவர் நிலையம் பொது மக்களுக்காக திறந்திருக்கும். பார்வையாளர்கள் http://visit.rashtrapati bhavan.gov.in மூலம் ஆன்லைனில் தங்கள் வருகையை முன்பதிவு செய்யலாம். மக்கள் வாரத்தில் ஆறு நாட்கள் (திங்கள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர) காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை, நிலையத்தைப் பார்வையிடலாம். குடியரசுத்தலைவர் மாளிகையின் வரவேற்பு நிலையத்திலும் நேரடியாக தங்களது வருகையை முன்பதிவு செய்யலாம்.

***

ANU/SMB/IR/RR/KV



(Release ID: 1989231) Visitor Counter : 91