புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்

2023-ஆம் ஆண்டின் செயல்பாடுகள்: புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்

பல்வேறு சர்வதேச புள்ளியியல் அமைப்புகளில் இந்தியா சார்பில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் பங்கு வகித்துள்ளது

ஐநா புள்ளியியல் ஆணையத்தில் உறுப்பினராக 4 ஆண்டுகளுக்கு இந்தியா தேர்வுசெய்யப்பட்டது

ஐநா புள்ளியியல் ஆணையம் மூலம், அலுவல்ரீதியான புள்ளியியல் விவகாரங்களில் சர்வதேச தரநிலை, வழிமுறைகளை வரையறுப்பதில் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் முக்கியப் பங்கு வகித்துள்ளது

சர்வதேச தரநிலைக்கு இணையாக முடிந்தவரை குறைந்த காலத்தில் மாதாந்திர தரவுகள்/ புள்ளியியல் குறியீடுகளை வெளியிட்டுள்ளது

விரைந்து மதிப்பீடு செய்யவும், தரவுகளின் தரத்தை மேம்படுத்தவும் ஆய்வுகளை நடத்த கணினி உதவியுடனான தனிநபர் நேர்காணல் முறையை பின்பற்றுகிறது

குறிப்பிட்ட கால தொழிலாளர் எண்ணிக்கை ஆய்வின் காலாண்டு அறிக்கைகள் உள்ளிட்ட ஆய்வு முடிவுகளை வெளியிடுவதில், தொழில்நுட்ப மேம்பாடு மூலம் களப் பணியை முடிப்பதற்கான கால அளவு 9 மாதங்களிலிருந்து 2-3 மாதங்களாக குறைந்துள்ளது

தரவு பயன்பாட்டாளர்கள் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், ஊடகங்கள், ஆய்வுகள் ஆகியவற்றைச் சேர்ந்த

Posted On: 18 DEC 2023 3:00PM by PIB Chennai

பல்வேறு சர்வதேச புள்ளியியல் அமைப்புகளில் இந்தியா சார்பில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் பங்கு வகித்துள்ளது. இந்திய புள்ளியியல் முறைக்கு சரியான அங்கீகாரமாகஐநா புள்ளியியல் ஆணையத்தின் உறுப்பினராக ஜனவரி 1, 2024 முதல் 4 ஆண்டுகளுக்கு இந்தியா தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ஐநா புள்ளியியல் ஆணையத்தின் மூலம்அலுவலக ரீதியான புள்ளியியல் விவரங்களுக்கான சர்வதேச தரநிலைகள் மற்றும் வழிமுறைகளை வரையறுப்பதில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை முக்கிய பங்கு வகிக்க உள்ளது.

சில முக்கிய புள்ளியியல் அம்சங்களில் அளவுகோல்கள்

பிற தேசிய புள்ளியியல் அலுவலகங்களைத் தொடர்ந்துசிறந்த நடைமுறைகளுடன் சில முக்கிய புள்ளியியல் தரவுகளுக்கான அளவுகோல்களை புள்ளியியல் அமைச்சகம் கொண்டுவந்துள்ளது.

கணினி உதவியுடனான தனிநபர் நேர்காணல்கள்

தரவுகளை உரிய காலத்தில் வெளியிடுவது மற்றும் கட்டமைப்பு ரீதியான மேம்பாட்டு விவகாரத்தில்தரவுகளைப் பெறவும்ஆய்வு செய்யவும், நவீன தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளை புள்ளியியல் அமைச்சகம் பின்பற்றுகிறது. இதன் ஓர் அம்சமாகதற்போது மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் கணினி உதவியுடனான தனிநபர் நேர்காணல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது ஆய்வு முடிவுகளை உரிய காலத்தில் வெளியிடவும்தரவுத் தரத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

தரவுகளை காட்சிப்படுத்துதல்

பயன்பாட்டாளர்களின் பின்னூட்ட கருத்துக்கள் அடிப்படையில்தனது இணையதளத்தை மேம்படுத்த அமைச்சகம் முயற்சி மேற்கொண்டது. இதன்படிமுதல்முறையாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் வலைதளத்தில் தரவு காட்சிப்படுத்துதல் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில்ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திநுகர்வோர் அடிப்படையில் விலைக் குறியீட்டு எண்குறிப்பிட்ட கால தொழிலாளர் எண்ணிக்கை குறித்த ஆய்வுதொழில் துறை உற்பத்திக் குறியீடு ஆகிய 4 விதமான தரவுகளை காட்சிப்படுத்தியுள்ளது.  மற்ற அமைச்சகங்களுக்கும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வலைதளத்தில் உள்ள இந்த அம்சங்களுக்கு தரவு பயன்பாட்டாளர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

தரவு பயன்பாட்டாளர்கள் கருத்தரங்குகள்

2022-ஆம் ஆண்டு அக்டோபர் முதல் தனது பயன்பாட்டாளர்களுக்காக மூன்று தரவு பயன்பாட்டாளர்கள் கருத்தரங்குகளை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை ஏற்பாடு செய்தது. இதன் தொடக்கமாகஇந்தக் கருத்தரங்குகளில் தேசிய கணக்கு புள்ளியியல் விவரங்கள் சேர்க்கப்பட்டன. இதில்கல்விதொழில் துறைஊடகங்கள்ஆய்வாளர்கள் உள்ளிட்டவற்றைச் சேர்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்கான திருத்தியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு மற்றும் புதிய வலைதளம் தொடக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தை புள்ளியியல் அமைச்சகம் நிர்வகித்து வருகிறது. இதன்மூலம்உள்ளூர் மக்களின் தேவை அடிப்படையில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்க வழி ஏற்படுகிறது. குறிப்பிட்ட வழிகாட்டுதல்கள் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது திருத்தியமைக்கப்பட்டு, 1.4.2023-ல் அமலுக்கு வந்தது.

நிதி பயன்பாட்டு வழிமுறையை பின்பற்றுவதற்காக வலைதளத்தை அமைச்சகம் தொடங்கியது.

பாலின புள்ளியியல்

கொள்கைகளை வகுப்பதில் பாலின புள்ளியியலின் பங்கு குறித்த கருத்தரங்கத்துக்கு மார்ச் 2023-ல் புள்ளியியல் அமைச்சகம் ஏற்பாடு செய்தது.

சுற்றுச்சூழல் புள்ளியியல்

"EnviStats India 2023 Vol. I: Environment Statistics" என்ற தொகுப்பு, 31.03.2023-ல் வெளியிடப்பட்டது. இதுகாற்று மற்றும் நீரின் தரம்கழிவு உற்பத்தி மற்றும் மேலாண்மைஉயிரி பரவல் மற்றும் நிலப் பயன்பாடுபசுமை இல்ல வாயு வெளியேற்றம்எரிசக்தி நுகர்வு உள்ளிட்ட பல்வேறு வகையான தலைப்புகளில் இடம்பெற்றது. "Envistats India Vol.II: Environment Accounts" என்ற தொகுப்பு செப்டம்பர் 29, 2023-ல் வெளியிடப்பட்டது.

************

PKV/SK/KV

(Release ID: 1987679) 

 



(Release ID: 1988833) Visitor Counter : 97


Read this release in: English , Urdu , Hindi , Kannada