விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா இன்று ராஞ்சியில் உள்ள இந்திய வேளாண் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தைப் பார்வையிட்டார்

Posted On: 16 DEC 2023 2:19PM by PIB Chennai

ராஞ்சியில் கர் கட்டங்காவில் உள்ள இந்திய வேளாண் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்திற்கு மத்திய வேளாண் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா இன்று (16-12-2023) சென்றார். அவருக்கு அங்கு பழங்குடியின குழந்தைகள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

ராஞ்சி மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சஞ்சய் சேத் மற்றும் இந்திய வேளாண் உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சுஜய் ரக்ஷித் ஆகியோருடன் இணைந்து அந்த நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகளை திரு அர்ஜுன் முண்டா ஆய்வு செய்தார்.

அப்போது பேசிய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, நமது நாட்டின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்றும் கிராமப்புற மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது எனவும் கூறினார். விவசாய வளர்ச்சிக்கும் கிராமப்புற வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று அவர் குறிப்பிட்டார். வேளாண் வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்துவதற்காக நுண்ணுயிர் உயிரி தொழில்நுட்பத்தின் திறனை ஒருங்கிணைந்த முறையில் பயன்படுத்துவதற்கான பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் இந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.

*******


ANU/PKV/PLM/DL


(Release ID: 1987124) Visitor Counter : 164