கப்பல் போக்குவரத்து அமைச்சகம்

நாட்டின் முக்கியமான பெரிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் மார்ச் 2023 நிலவரப்படி 1617.39 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது

Posted On: 15 DEC 2023 3:09PM by PIB Chennai

பெரிய துறைமுகங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் திறனை அதிகரிப்பது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாகும். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்கிறது. புதிய முனையங்களை அமைத்தல், ஏற்கனவே உள்ள முனையங்களை இயந்திரமயமாக்குதல், பெரிய கப்பல்கள் வரும்வகையில் ஆழப்படுத்துல், துறைமுகங்களில் இருந்து சாலை மற்றும் ரயில் இணைப்பை மேம்படுத்துதல் போன்றவை இதில் அடங்கும்.

ந்த நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டின் முக்கிய பெரிய துறைமுகங்களின் சரக்கு கையாளும் திறன் மார்ச் 2023 நிலவரப்படி 1617.39 மில்லியன் டன்களாக (எம்.டி.பி.ஏ) உயர்ந்துள்ளது.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தைப் பொறுத்தவரை 2020-21, 2021-22, 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் தலா 91 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.

சென்னை துறைமுகத்தைப் பொறுத்தவரை 2020-21, 2021-22-ம் நிதியாண்டுகளில் தலா 135 டன் சரக்குகளையும் 2022-23-ம் நிதியாண்டில்  136 மில்லியன் டன் சரக்குகளையும் கையாண்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார்  துறைமுகத்தைப் பொறுத்தவரை 2020-21, 2021-22, 2022-23 ஆகிய 3 நிதியாண்டுகளிலும்  தலா 111.46 சரக்குகளை கையாண்டுள்ளது.

இத்தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர்  திரு சர்பானந்தா சோனோவால் மக்களவையில் இன்று (15.12.2023) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

***

(Release ID: 1986644)

ANU/PKV/PLM/AG/KRS



(Release ID: 1986862) Visitor Counter : 74


Read this release in: English , Urdu , Marathi , Hindi