பாதுகாப்பு அமைச்சகம்

முன்னாள் படைவீரர்களுக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கு / வேலைவாய்ப்பு முகாம்

Posted On: 15 DEC 2023 3:04PM by PIB Chennai

மீள்குடியேற்ற இயக்குநரகம் 2023, நவம்பர் 23 அன்று குருகிராமில் உள்ள துன்டஹேரா ராணுவ நிலையத்தில் ஒரு வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. மொத்தம் 33 நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றன, இதில் பங்கேற்ற நிறுவனங்கள் மூலம் முன்னாள் ராணுவத்தினர் 1,326 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

மொத்தம் 1,139 முன்னாள் படைவீரர்கள் நிறுவன தேர்வு செயல்முறையின்படி நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்புக்காக நிறுவனங்களால் பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2023-24 நிதியாண்டில் இந்தியா முழுவதும் மேலும் மீள்குடியேற்ற இயக்குநரகத்தின் மூலம் வேலைவாய்ப்பு கருத்தரங்குகள் / வேலைவாய்ப்பு முகாம்கள் சண்டிகர், விசாகப்பட்டினம், ஆல்வார், புனே, மும்பை, இந்தூர் மற்றும் லக்னோவில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட் மக்களவையில்  எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

************** 

ANU/ PKV/BS/RR/KV



(Release ID: 1986720) Visitor Counter : 57