விண்வெளித்துறை
2014-ம் ஆண்டில் 1 என்ற எண்ணிக்கையில் மட்டும் இருந்த விண்வெளி புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 189 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்
Posted On:
14 DEC 2023 6:25PM by PIB Chennai
2014-ம் ஆண்டில் 1 என்ற எண்ணிக்கையில் மட்டும் இருந்த விண்வெளி புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 189 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை; பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இந்திய விண்வெளி புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு 124.7 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனை அவர் தெரிவித்தார்.
இந்திய விண்வெளிக் கொள்கை 2023 ஐ அரசு அறிவித்துள்ளதன் மூலம் விண்வெளி நடவடிக்கைகளின் அனைத்து துறைகளிலும் அரசு சாரா நிறுவனங்கள் இறுதி வரை பங்கேற்க உதவுகிறது. விண்வெளித் துறையில் ஊக்குவிப்புகள் மற்றும் சீர்திருத்தங்கள் காரணமாக, பிற முக்கிய முன்னேற்றங்கள் மற்றும் தாக்கம் பின்வருமாறு:
சில அரசு சாரா நிறுவனங்கள் தங்கள் சொந்த செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தின. பல விண்வெளித் தொழில்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களும் தங்கள் சொந்த செயற்கைக்கோள்களை உருவாக்கி வருகின்றன. இந்த செயற்கைக்கோள்கள் வேளாண்மை, பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்றவற்றில் பயன்பாடுகளுக்கு பங்களிக்கும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
***
(Release ID: 1986393)
ANU/AD/IR/AG/KRS
(Release ID: 1986440)
Visitor Counter : 139