நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நிலக்கரி அமைச்சகம், மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் அரசு மின் சந்தை கொள்முதல் இலக்கைத் தாண்டி 2023 டிசம்பர் 10 நிலவரப்படி ரூ.34524 கோடியைக் கடந்தது

Posted On: 14 DEC 2023 4:33PM by PIB Chennai

நிலக்கரி அமைச்சகம், அதன் பொதுத்துறை நிறுவனங்களுடன் (பி.எஸ்.யு) 2023-24 நிதியாண்டில் அரசு  மின் சந்தை (ஜி.இ.எம்) மூலம் கொள்முதலில் சிறந்த சாதனைகளை நிரூபித்துள்ளது.

2023 டிசம்பர் 10, நிலவரப்படி, நடப்பு 2023-24 நிதியாண்டில், அமைச்சகம் மற்றும் அதன் பொதுத்துறை நிறுவனங்களால் ஜிஇஎம் இன் தற்காலிக கொள்முதல் ரூ.34,524 கோடியை எட்டியுள்ளது, இது குறிப்பிடத்தக்க 162% சாதனை விகிதத்துடன் ரூ.21,325 கோடி இலக்கை கடந்துள்ளது.

ஜிஇஎம் கொள்முதலில் இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் நாட்டின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் முன்னணியில் இருப்பதாக ஜிஇஎம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அனைத்து மத்திய அமைச்சகங்கள் / துறைகளில் ஜி.இ.எம் மூலம் ஒட்டுமொத்தக் கொள்முதலில் நிலக்கரி அமைச்சகம் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள், நிலக்கரி அமைச்சகம் ஒட்டுமொத்தமாக முதலாவது இடத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

ANU/PKV/IR/AG/KRS


(Release ID: 1986429) Visitor Counter : 89


Read this release in: Telugu , English , Urdu , Hindi