விவசாயத்துறை அமைச்சகம்

ஆசியான்-இந்தியா சிறுதானிய திருவிழாவை மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்

Posted On: 14 DEC 2023 3:58PM by PIB Chennai

ஆசியான்-இந்தியா சிறுதானிய திருவிழாவை மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர்கள் கைலாஷ் சவுத்ரி, சுஷ்ரி ஷோபா கரந்தலாஜே, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை செயலாளர் மனோஜ் அஹுஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு, விழிப்புணர்வை அதிகரிப்பதையும், சிறுதானியங்கள் மற்றும் சிறுதானியங்கள் சார்ந்த பொருட்களுக்கு ஒரு பெரிய சந்தையை நிறுவுவதையும் இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

இவ்விழாவில் கலந்து கொண்ட இந்தியா, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு அர்ஜூன் முண்டா, தானியங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வை மேம்படுத்துவதற்கான அரசின் கொள்கைகள் மற்றும் சந்தை கண்டுபிடிப்புகளை எடுத்துரைத்தார். சிறுதானியங்கள் விவசாயிகள், நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகின்றன மற்றும் உலகளாவிய உணவு-ஊட்டச்சத்து பாதுகாப்பிற்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன என்று திரு முண்டா கூறினார்.  அதன் அதிகரித்த நுகர்வுடன் தொடர்புடைய சமூக-பொருளாதார, ஊட்டச்சத்து மற்றும் பருவநிலை நன்மைகளை எடுத்துரைத்தார்.

சிறுதானியங்கள் மனிதகுலத்திற்கு இயற்கை அளித்த கொடை, அத்துடன் நிலையான எதிர்காலத்திற்கான நம்பிக்கைக்குரிய உணவு ஆதாரம் என்று அவர் தெரிவித்தார்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளைத் தணிப்பதற்கும், நிலையான வேளாண் நடைமுறைகளைப் பின்பற்றுவதை ஊக்குவிப்பதற்கும் மத்திய அரசு மிகப்பெரிய பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளதுடன், சிறுதானியங்களை ஒரு சிறந்த தீர்வாக நிலைநிறுத்தியுள்ளது என்று திரு முண்டா கூறினார்.  சிறுதானியங்களை ஊக்குவிக்கவும், அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்யவும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், சிறுதானிய துணை இயக்கத்தை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வேளாண் அமைச்சகம் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. வேளாண் அமைச்சகம், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்களுடன் இணைந்து, நாட்டில் சிறுதானியங்களை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல மாநில சிறுதானிய இயக்கங்கள் மற்றும் திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பது நமது உறுதிப்பாட்டிற்கு சான்றாகும் என்று திரு அர்ஜூன் முண்டா குறிப்பிட்டார்.

 

***

ANU/PKV/IR/AG/KPG



(Release ID: 1986366) Visitor Counter : 81