சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

தேசிய நெடுஞ்சாலைகளுக்கான மூலதனச் செலவு 2013-14 -ம் ஆண்டில் சுமார் ரூ.51,000 கோடியிலிருந்து 2022-23-ம் ஆண்டில் ரூ. 2,40,000 கோடிக்கு மேல் கணிசமாக அதிகரித்துள்ளது

Posted On: 14 DEC 2023 2:29PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலைகளின்   மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் முதன்மையாக பொறுப்பாகும். 2013-14 -ம் ஆண்டில் சுமார் ரூ.31,130 கோடியாக இருந்த அமைச்சகத்தின் பட்ஜெட் ஒதுக்கீடு 2023-24 -ம் ஆண்டில் ரூ.2,70,435 கோடியாக அதிகரித்துள்ளது. 2013-14-ம் ஆண்டில் சுமார் 51,000 கோடி ரூபாயாக இருந்த தேசிய நெடுஞ்சாலைகளுக்கான மூலதனச் செலவு 2022-23 -ம் ஆண்டில் 2,40,000 கோடி ரூபாயாக கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்தகைய அதிகரித்த பட்ஜெட் ஒதுக்கீடு மார்ச் 2014 -ல் சுமார் 91,287 கி.மீ ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பை தற்போது சத்தீஸ்கர், உத்தரகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட சுமார் 1,46,145 கி.மீ ஆக விரிவுபடுத்த வழிவகுத்தது.

அதிவேக வழித்தடங்கள் உட்பட 4 வழி மற்றும் தேசிய நெடுஞ்சாலை கட்டமைப்பின் தொலைவு மார்ச், 2014 -ல் சுமார் 18,371 கி.மீ.யிலிருந்து இதுவரை சுமார் 46,179 கி.மீ ஆக 250% அதிகரித்துள்ளது. மேலும், 2 வழி தேசிய நெடுஞ்சாலைகளின் தொலைவு மார்ச், 2014 -ல் சுமார் 27,517 கி.மீ லிருந்து சுமார் 14,870 கி.மீ ஆக குறைந்துள்ளது.

இத்தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

***

ANU/PKV/IR/AG/KPG



(Release ID: 1986213) Visitor Counter : 85