பாதுகாப்பு அமைச்சகம்

'அண்டார்டிகா பயணம்' மேற்கொண்ட டார்ஜிலிங்கில் உள்ள இமயமலை மலையேற்ற நிறுவனத்தின் குழுவினரைப் பாதுகாப்பு இணையமைச்சர் கொடியசைத்து வரவேற்றார்

Posted On: 13 DEC 2023 4:19PM by PIB Chennai

'அண்டார்டிகா பயணம்' மேற்கொண்ட, டார்ஜிலிங்கில் உள்ள இமயமலை மலையேற்ற நிறுவனத்தின் குழுவினரைப் பாதுகாப்பு இணையமைச்சர் திரு அஜய் பட் 2023, டிசம்பர் 13 அன்று புதுதில்லியில் கொடியசைத்து வரவேற்றார்

கேப்டன் ஜெய் கிஷன் தலைமையிலான மூன்று மலையேற்ற வீரர்கள் குழு 2021-ம் ஆண்டில் இந்தப் பயணத்தைத் தொடங்கியது. சிக்கிம் இமயமலையில் 16,500 அடி உயரத்தில் உள்ள ரெனாக் மலையில் 7,500 சதுர அடி மற்றும் 75 கிலோ எடை கொண்ட தேசியக் கொடியை இந்தக் குழு ஏற்றியது.

இது ஆசிய சாதனைப் புத்தகம், இந்திய சாதனைப் புத்தகம் ஆகியவற்றில் மலை மீது ஏற்றப்பட்ட மிகப்பெரிய இந்திய தேசியக் கொடியாக பதிவு செய்யப்பட்டது. இந்தப் பயணத்தின் போது, தென் துருவத்தின் மிக உயரமான வின்சன் சிகரத்தின் மீது மூவண்ணக்  கொடியையும் குழுவினர் காட்சிப்படுத்தினர்.

தேசியத் தலைநகரில் உள்ள விமானப்படை பால பாரதி பள்ளியில் 7,500 சதுர அடி தேசியக் கொடியின் இறுதிகட்டக் காட்சிப்படுத்தலைப் பாதுகாப்பு இணையமைச்சர் பார்வையிட்டார். இதில் சிக்கிமில் உள்ள இமயமலையின் (16,000 அடி) உயரமான பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித மண் மற்றும் நீர் திரு அஜய் பட்டுக்கு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு இணையமைச்சர் திரு அஜய் பட் , பயணக் குழுவினரின் முயற்சிகளைப் பாராட்டினார். இவை இளைஞர்களிடையே சாகச உணர்வையும் தேசபக்தியையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட வெளிப்புற முயற்சிகள் என்று அவர் குறிப்பிட்டார்.

***

SMB/IR/RR/KPG



(Release ID: 1985963) Visitor Counter : 58


Read this release in: English , Urdu , Hindi , Bengali