சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
சிறுபான்மையினர் கல்விக்கான அரசு உதவி
Posted On:
13 DEC 2023 3:52PM by PIB Chennai
சிறுபான்மையினர், குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவுற்றோர், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலனுக்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மூலம் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
(i) மெட்ரிக் கல்வி உதவித்தொகை, (ii) போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை, தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகை ஆகிய கல்வி உதவித் தொகைத் திட்டங்களின் மூலம் பயன்பெறும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைத் திட்டங்களை சிறுபான்மையினர் நல அமைச்சகம் குறிப்பாக செயல்படுத்தி வருகிறது.
கல்வி அமைச்சகத்தின் 2021-22-ம் ஆண்டிற்கான கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்புத் தரவுகளின்படி, சிறுபான்மை சமூக சேர்க்கை விகிதம் தொடக்க நிலை முதல் மேல்நிலை வரை மொத்த சேர்க்கையில் 17.8% ஆகும். 3 கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் விண்ணப்பங்களைப் புதுப்பித்தல் தொடர்பான தரவுகள் கடந்த 3 ஆண்டுகளில் அதன் விகிதம் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
2019-20 முதல் 2021-22 ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கப்பட்ட ஆண்டு வாரியான கல்வி உதவித் தொகை விவரங்கள்
|
திட்டம்
|
புதுப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள்
|
2021-22
|
2020-21
|
2019-20
|
ப்ரீ-மெட்ரிக்
|
2843983
|
2418354
|
2269892
|
போஸ்ட் மெட்ரிக்
|
228520
|
200857
|
164081
|
தகுதி அடிப்படையில்
|
72343
|
62079
|
55800
|
மொத்தம்
|
3144846
|
2681290
|
2489773
|
இத்தகவலை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
***
SMB/IR/RR/KPG
(Release ID: 1985961)
Visitor Counter : 128