பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பல்வேறு துறைகளில் மகளிரின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள்: மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி தகவல்

Posted On: 13 DEC 2023 2:46PM by PIB Chennai

நாட்டின் மிக உயர்ந்த அரசியல் பதவிகளில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் அவர்களை பிரதிநிதித்துவப் படுத்துவதற்கான மிகப்பெரிய முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மக்களவை மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்கும் வகையில், நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டம், 2023,  செப்டம்பர் 28 அன்று வெளியிடப்பட்டது.

தீன் தயாள் அந்த்யோதயா யோஜனா - தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் கீழ், சுமார் 10 கோடி பெண் உறுப்பினர்களைக் கொண்ட 90 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், பெண்களின் பொருளாதார மேம்பாடு தொடர்பாக கிராமப்புறங்களில்  மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட சுமார் 4 கோடி வீடுகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயரில் உள்ளன. இவை அனைத்தும் நிதி முடிவுகளை எடுப்பதில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்துள்ளன. பெரும்பாலான உள்ளூர் தயாரிப்புகளின் அதிகாரம் பெண்களின் கைகளில் இருப்பதால், உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு இயக்கம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் பல்வேறு முக்கிய விஷயங்களை மேற்கொண்டுள்ளது.

போர் விமானிகள் போன்ற போர்ப் பணிகளில் பெண்களுக்கு நிரந்தரப் பணி, தேசிய பாதுகாப்பு அகாடமியில் (என்.டி.ஏ) பெண்களை அனுமதித்தல், ராணுவப் பள்ளிகளில் பெண்களைச் சேர்ப்பது போன்ற ஆயுதப்படைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க அரசு வழிவகை செய்துள்ளது. இந்திய விமானப் படையில் அனைத்துப் பிரிவுகளிலும் பெண் அதிகாரிகள் பணியமர்த்தப்படுகின்றனர். அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படை முதன்முறையாகப் பெண்களைப்  பல்வேறு பணிகளில் நியமித்துள்ளது.

பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் ஆகிய பணியிடங்களில்   பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள காவலர்களின் மொத்த எண்ணிக்கையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 33 சதவீதமாக உயர்த்துமாறு அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்திய விமான நிலைய ஆணையம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு, தீயணைப்பு சேவைகள், விமான நிலைய செயல்பாடுகள் போன்றவை பெண்களின் பங்கேற்பை சாத்தியமாக்கியுள்ளன. ஏஏஐ நடத்தும் நேரடி ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் பெண் விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணத்தில் கூடுதல் விலக்கு அளிக்கப்படுகிறது.

பொதுவாழ்வில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த பின் முதல் முறையாக 2019 மக்களவைத் தேர்தலில் 81 பெண்கள் மக்களவை உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் 1.45 மில்லியனுக்கும் அதிகமான அல்லது 46% பெண்கள் பிரதிநிதிகளாக  உள்ளனர்.

ந்தத் தகவலை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி ஜுபின் இரானி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

***

ANU/SMB/BS/RS/KPG


(Release ID: 1985921) Visitor Counter : 138


Read this release in: English , Urdu , Hindi , Assamese