சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

'நீரில் மூழ்குவதைத் தடுப்பதற்கான உத்திபூர்வக் கட்டமைப்பை' மத்திய அமைச்சர்கள் திரு எஸ்.பி.சிங் பாகெல், டாக்டர் பாரதி பிரவீன் பவார் ஆகியோர் வெளியிட்டனர்.

Posted On: 13 DEC 2023 12:35PM by PIB Chennai

'நீரில் மூழ்குவதைத் தடுப்பதற்கான உத்திபூர்வக் கட்டமைப்பை' மத்திய குடும்ப நல அமைச்சக இணையமைச்சர் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் ஆகியோர்  இன்று வெளியிட்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகெல், "நீரில் மூழ்குவதைத் தடுக்க முடியும் என்றும்,  இத்தகையை சம்பவங்களைக் குறைக்க அனைவருக்கும் நீர் பாதுகாப்புப் பற்றிய நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் கூறினார். "நாட்டில் 38000 நீரில் மூழ்கும் சம்பவங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், இது போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க மக்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார். குறிப்பாக பண்டிகைகளின் போது அதிக அளவு எச்சரிக்கையையும், விழிப்புணர்வையும் கடைப்பிடிக்குமாறு மாநிலங்களை அவர் வலியுறுத்தினார்.

தேசிய உத்திபூர்வக் கட்டமைப்பு ஆவணத்தில் இடம்பெற்றுள்ள உத்திகள் குறித்து விவரித்த அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார், "பல்துறை ஒத்துழைப்பை ஊக்குவித்தல், நீரில் மூழ்குவது குறித்த பொது விழிப்புணர்வை வலுப்படுத்துதல், தேசிய மற்றும் மாநில அளவில் பொருத்தமான நடவடிக்கைகளை உருவாக்குதல் ஆகியவை பாதுகாப்பான சூழலை உருவாக்கும்” என்றார்."

" நீரில் மூழ்குவதைத் தடுக்க விழிப்புணர்வு, கல்வி, தரவு சார்ந்த தலையீடுகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, ஒத்துழைப்பு, வலுவான அவசரகால நடவடிக்கை ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான மற்றும் உத்திபூர்வ அணுகுமுறை தேவைப்படுகிறது" என்பதை  டாக்டர் பவார் வலியுறுத்தினார்.

இந்த மாநாட்டில் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் அதுல் கோயல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக இணைச் செயலாளர் டாக்டர் மானஸ்வி குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

***

ANU/SMB/RS/KPG

 



(Release ID: 1985810) Visitor Counter : 68