தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சியடைந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி பங்கேற்றார்

Posted On: 12 DEC 2023 5:48PM by PIB Chennai

 நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் இயக்கத்தின் ஒரு பகுதியாக தென்மேற்கு தில்லியில் உள்ள ஆர்.கே.புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணைமைச்சர் திருமதி மீனாட்சி லேகி கலந்துகொண்டார். வளர்ச்சியடைந்த பாரதம்  உறுதிமொழிக்கு தலைமை தாங்கிய அவர், பல்வேறு மத்திய அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். திறமையான நிர்வாகத்தின் முக்கியப் பங்கை வலியுறுத்திய அமைச்சர், பொதுமக்களுடன் தீவிரமாக ஈடுபடுவதற்கும் உதவுவதற்கும் அரசின் கூட்டு முயற்சிகளை சுட்டிக்காட்டினார்.

காசநோய் போன்ற சுகாதார கவலைகளை நிவர்த்தி செய்ய, காசநோயாளிகளுக்கு ஒன்பது மாதங்களுக்கு இலவச மருந்துகள் மற்றும் ரேஷன் பொருட்களை அரசு உறுதி செய்வதாகவும். ஏழை மக்களிடையே நிதி அதிகாரத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும் அவர் எடுத்துரைத்தார். முன்பெல்லாம், வங்கிகள் பெரும்பாலும் வசதி படைத்தவர்களுக்கு, அவர்களின் சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் வழங்கின என்றும், இப்போது, சொத்துக்கள் இல்லாதவர்கள், கடினமாக உழைத்து வெற்றி பெற விரும்புபவர்கள், நேரடியாக வங்கியை அணுகி கடன் பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 வளர்ச்சியடைந்த பாரதம் நமது லட்சியப் பயணத்தின் ஒரு பகுதியாக, பிரதமரின் அனைவருக்கும் வங்கிக் கணக்கு திட்டம், பிரதமரின் இலவச சமையல் எரிவாயு திட்டம் போன்ற அரசின் திட்டங்களின் நன்மைகளைப் பெறுமாறு திருமதி லேகி மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

***

ANU/AD/IR/AG/KRS


(Release ID: 1985625) Visitor Counter : 101