சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
2025 அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் என் 2, என் 3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் ஓட்டுநர் பகுதிகளில் குளிர்சாதன அமைப்பு நிறுவுவதை கட்டாயமாக்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது
Posted On:
11 DEC 2023 4:29PM by PIB Chennai
2025 அக்டோபர் 1 முதல் தயாரிக்கப்படும் என் 2, என் 3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் ஓட்டுநர் பகுதிகளில் குளிர்சாதன அமைப்பை நிறுவுவதை கட்டாயமாக்கி 2023, டிசம்பர் 8 அன்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவிக்கை. வெளியிட்டுள்ளது .
குளிர்சாதன அமைப்பு பொருத்தப்பட்ட ஓட்டுநர் பகுதியின் செயல்திறன் சோதனை ஐ.எஸ் 14618: 2022 -ன் படி, அவ்வப்போது திருத்தப்படும்.
இந்த அறிவிப்பின்படி, 2025 அக்டோபர் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு டிரைவ்-அவே சேசிஸ் வடிவில் தயாரிக்கப்படும் என் 2, என் 3 வகையின் எந்தவொரு வாகனமும், ஐஎஸ் 14618:2022 -ன் படி குளிர்சாதன அமைப்பு வகை அங்கீகரிக்கப்பட்ட உபகரணத் தொகுப்பை வழங்க வேண்டும்.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் 2023, ஜூலை 10 அன்று சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டு வரைவு அறிவிப்பை வெளியிட்டது.
***
ANU/SMB/IR/RS/KRS
(Release ID: 1985016)
(Release ID: 1985176)
Visitor Counter : 129