ஜவுளித்துறை அமைச்சகம்

ஒரே பாரதம் சேலை நடைப்பயணம் நிகழ்ச்சியை 2023 டிசம்பர் 10 அன்று மும்பையில் ஜவுளி அமைச்சகம் நடத்துகிறது

Posted On: 08 DEC 2023 3:11PM by PIB Chennai

ஜவுளி அமைச்சகம் இந்தியாவின் நிதி தலைநகரான மும்பையில் நாட்டின் மிகப்பெரிய  ஒரே பாரதம் சேலை நடைபயணத்தை' 2023 டிசம்பர் 10 அன்று நடத்துகிறது. இந்தியாவில் கைத்தறிப்  புடவை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வு நாடு முழுவதும் உள்ள பெண்களின் பங்கேற்பை அழைப்பதன் மூலம் புடவை அணியும் முறைகளை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் இந்தியாவை "வேற்றுமையில் ஒற்றுமை" கொண்ட நாடாக முன்னிறுத்துகிறது. இது பாரம்பரிய ஜவுளியின் உணர்வை ஊக்குவிக்கும் மற்றும் "உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு என்ற சிந்தனையை ஊக்குவிக்கும். பெண்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வழிவகுக்கும்.

 

கலாச்சாரப் பன்முகத்தன்மை மற்றும் அதிகாரமளித்தலின் இந்தக் கொண்டாட்டத்தில், முன்னணி தொழில் வல்லுநர்கள், பம்பாய் திரைப்பட  மற்றும் தொலைக்காட்சி ஆளுமைகள், விளையாட்டுப் பிரபலங்கள், வணிகப்  பெண்கள், வடிவமைப்பாளர்கள், இல்லத்தரசிகள், இசைத் துறையைச் சேர்ந்த பெண்கள் உட்பட 5000-க்கும் அதிகமான  பெண்கள் தங்கள் தனித்துவமான பாரம்பரிய உடையில் அலங்கரிக்கப்பட்ட நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.

மும்பை பாந்த்ரா கிழக்கு, பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் உள்ள எம்.எம்.ஆர்.டி.சி மைதானத்தில் ஜவுளித் துறை இணை அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ், மக்களவை உறுப்பினர் திருமதி பூனம் மகாஜன் ஆகியோர் இணைந்து ஒரே பாரதம் சேலை நடைபயணம்' நிகழ்ச்சியை தொடங்கி வைக்கின்றனர்.

 

பைதானி, கோட்பாட், கோட்டா டோரியா, தங்கைல், போச்சம்பள்ளி, காஞ்சிபுரம், திருபுவனம், ஜம்தானி, சாந்திபுரி, சந்தேரி, மகேஸ்வரி, படோலா, மொய்ராங்கி, பனாரசி ப்ரோகேட், தஞ்சோய், பாகல்புரி சில்க், பவான் புட்டி, பஷ்மினா போன்ற புடவைகளின் தனித்துவம், பிரத்யேக கலை, நெசவு, வடிவமைப்புகள் மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகள் உலகெங்கிலும் ஈர்ப்பானது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலசெய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1983972

***

ANU/SMB/IR/RS/KRS



(Release ID: 1984064) Visitor Counter : 71