பிரதமர் அலுவலகம்
நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் டிசம்பர் 9-ம் தேதி பிரதமர் கலந்துரையாடுகிறார்
இந்த கலந்துரையாடலில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகள் காணொலி மூலம் இணைகின்றனர்
प्रविष्टि तिथि:
07 DEC 2023 7:58PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி டிசம்பர் 9-ம் தேதி பிற்பகல்12:30 மண்க்கு நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரையின் பயனாளிகளுடன் வீடியோ காணொலி மூலம் கலந்துரையாடுவதுடன் இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயனாளிகள் காணொளி முறையில் இணைவார்கள். நாடு முழுவதிலுமிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை வாகனங்கள், ஆயிரக்கணக்கான வேளாண் அறிவியல் மையங்கள் மற்றும் பொது சேவை மையங்களும் இந்த நிகழ்ச்சியின்போது இணைக்கப்படும். இதில் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா எனப்படும் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்திரை மத்திய அரசின் முக்கிய திட்டங்களின் பலன்கள் உரிய காலத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
****************
ANU/AD/PLM/KV
(रिलीज़ आईडी: 1983959)
आगंतुक पटल : 355
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam