சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

பிஎம்-தக்ஷ் திட்டத்தின் கீழ் 2025 வரை 1,69,300 பயிற்சியாளர்கள் பயிற்சி பெற உள்ளனர், இந்தப் பயிற்சிகளுக்கு ரூ.286.42 கோடி செலவிடப்படும்.

Posted On: 08 DEC 2023 11:09AM by PIB Chennai

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் பிஎம்-தக்ஷ்   திட்டம் என்பது 2020-21 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஒரு மத்திய துறை திட்டமாகும். ஆதிதிராவிடர், இதர பிற்படுத்தப்பட்டோர்,       குப்பை அகற்றுவோர் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் திறனை உயர்த்துவதும், அவர்களின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக சுயதொழில், கூலி வேலை ஆகிய இரண்டிலும் அவர்களைப் பணியமர்த்துவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

2020-21 ஆம் ஆண்டில், சுமார் 32,097 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது, அவர்களில் 24,652 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இப்பயிற்சிகளுக்கான மொத்த செலவு ரூ.44.79 கோடியாகும். இதேபோல், 2021-22 ஆம் ஆண்டில், 42,002 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களில் 31,033 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  இப்பயிற்சிகளுக்காக ரூ.68.22 கோடி செலவிடப்பட்டுள்ளது.  2022-23 ஆம் ஆண்டில், 33,021 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.  இதில் 21,552 பயிற்சியாளர்களுக்கு  பணி  வழங்கப்பட்டது. இதற்கு ரூ.14.94 கோடி செலவிடப்பட்டது.  இவ்வாறாக, மொத்தம்  1,07,120 பயிற்சியாளர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களில் 77,237 பேர் லாபகரமான வேலைவாய்ப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  இப்பயிற்சிகளுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை ரூ.127.95 கோடியாகும்.         

இதேபோல், 2023-24 முதல் 2025-26 வரை 1,69,300 பேருக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 2023-24 ஆம் ஆண்டில், 28 அரசு மற்றும் 84 தனியார் பயிற்சி நிறுவனங்கள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன .   112 அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களுக்கு 95,000-க்கும் மேற்பட்ட பயிற்சி இலக்குகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1983885

***

ANU/SMB/PKV/AG/KV



(Release ID: 1983940) Visitor Counter : 79