சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

மறுப்புச் செய்தி - 2023, டிசம்பர் 06 அன்று நியூஸ் 18 உத்தரப் பிரதேசம் - உத்தராகண்ட் தொலைக்காட்சியில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் விதமாக, உத்தரகாசியில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் திட்டங்கள் தொடர்பான விளக்கம்

Posted On: 07 DEC 2023 10:44AM by PIB Chennai

நியூஸ் 18 உத்தரபிரதேசம் - உத்தராகண்ட் ஒளிபரப்பிய செய்திக்கு பதிலளிக்கும் விதமாக இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. அந்தச் செய்தி அலைவரிசையில் குறிப்பிட்டபடி அந்தக் குறிப்பிட்ட சாலையில் பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் நிலச்சரிவுகள் இருப்பதாகக் கூறப்படும் செய்தி நிரூபிக்கப்படவில்லை. அது தவறானது மற்றும் ஆதாரமற்றது.

உத்தரகாசியின் பரேதி பகுதியில் நிலச்சரிவு சம்பவங்கள் குறித்து உண்மைகளைச் சரிபார்ப்பது முக்கியம். பாதிக்கப்பட்ட மலையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகமான என்.ஹெச்.ஐ.டி.சி.எல் விரும்புகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பரேத்தி,  நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாகும். இது அப்பகுதியில் உள்ள சாலையில் அதிக சிரமங்கள், உயிர் இழப்புகள் மற்றும் சொத்து இழப்புகளை ஏற்படுத்தியது. என்.ஹெச்.ஐ.டி.சி.எல் நிபுணர்கள் குழு மலையின் பலவீனம் தொடர்பாக புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் முழுமையான மதிப்பீடுகளை நடத்தியுள்ளது. 

நிலச்சரிவு சம்பவங்களைத் தடுப்பதற்கும், மலைப்பிரதேசத்தின் மீள்திறனை அதிகரிப்பதற்கும் விரிவான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் என்.ஹெச்.ஐ.டி.சி.எல் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

என்.எச்.ஐ.டி.சி.எல் அப்பகுதியை உறுதிப்படுத்தி பயணிகளைப் பாதுகாக்கும் பணியை இரண்டு கட்டங்களாக மேற்கொண்டது:-

நிலை-1 - ஒப்பந்த நிபந்தனைகளின் அடிப்படையில் சாலையின் முழு நீளத்திற்கும் 20 மீட்டர் வரை சரிவுகள் அகற்றப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டன. முன்னெச்சரிக்கைக்காக 100 மீட்டர் தூரத்திற்கு 27 மீட்டர் கூடுதல் பகுதியும் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அதிக அளவிலான சரிவுகள் காரணமாக, சாலைகளில் கற்கள் அதிக வேகத்துடன் கீழே விழுந்தன. இதனால் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதியில் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

நிலை-2. நிலச்சரிவு பாதுகாப்பு காட்சியகம் அமைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள ஏ, பி, சி மற்றும் டி மண்டலங்களின் சிறிய பகுதிகள் டி.டி வலை மற்றும் ரோம்பாய்டல் வலை, போன்றவற்றைப் பயன்படுத்தி நிலைப்படுத்தப்பட்டன. ஐ.ஐ.டி ரூர்க்கி மூலம் வடிவமைப்பு சரிபார்க்கப்பட்டது. இந்த அமைப்பு கடந்த இரண்டு பருவமழைகளின்போது முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதுடன் சேதமடையாமல் உள்ளது. அத்துடன் சீரான போக்குவரத்திற்கு பாதுகாப்பான பாதையாக மாறியுள்ளது.

நிலச்சரிவு போன்ற சவால்கள் ஏற்படும்போது அதன் செயல்திறனை உறுதி செய்வதற்காக இந்த சுரங்கப்பாதை அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பொருட்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை பாதுகாப்பானதாக உள்ளது. 

பாதுகாப்புக்கான என்.ஹெச்.ஐ.டி.சி.எல்லின் அர்ப்பணிப்பு இந்த சுரங்கப்பாதையின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் பிரதிபலிக்கிறது. இது இப்பகுதியில் பயணிக்கும் அனைவருக்கும் மன அமைதியை வழங்குகிறது. சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.

ஆதாரமற்ற கருத்துகளை வெளியிடுவதற்கு முன்பு செய்தி அலைவரிசைகள்  உண்மையை சரிபார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றன.

https://www.youtube.com/watch?v=fTOfqr_72IM என்ற இந்த யூடியூப் இணைப்பிலும் வலைப்பதிவர் ஒருவர் வெளியிட்டுள்ள https://www.facebook.com/reel/1370145373765743 என்ற முகநூல் இணைப்பிலும் உத்தரகாசி  திறந்த சுரங்கப்பாதை குறித்த விவரம்  இடம்பெற்றுள்ளது.

*******

ANU/SMB/PLM/KV



(Release ID: 1983442) Visitor Counter : 67