ரெயில்வே அமைச்சகம்

2014-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை 38,650 கிலோ மீட்டர் நீள ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன

Posted On: 06 DEC 2023 4:13PM by PIB Chennai

ரயில்வேயின் திட்டங்கள் மாநில எல்லைகளைக் கடந்து விரிவடைவது என்பதால் ரயில்வே திட்டங்கள் மண்டல ரயில்வே வாரியாக செயல்படுத்தப்படுகின்றன. 01.04.2023 நிலவரப்படி, இந்திய இரயில்வே முழுவதும், தோராயமாக 20,296 கிலோ மீட்டர் நீளமுள்ள 231 இரட்டை ரயில்பாதைத் திட்டங்கள் ஒப்புதல்  அல்லது கட்டுமான கட்டத்தில் உள்ளன. அவற்றில் 5,455 கிலோ மீட்டர் நீளப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மார்ச் 2023 வரை ரூ.1.03 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.

2014 முதல் 31.10.2023 வரை 38,650 கிலோ  மீட்டர்  நீளத்துக்கு ரயில் வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு 21,801 கிலோ மீட்டர் ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 31.10.2023 நிலவரப்படி 3,659 கிலோ மீட்டர் நீள ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

மின்மயமாக்கல் திட்டங்கள் நிறைவடைவது, வனத்துறை அனுமதிகள், பல்வேறு துறைகளிடமிருந்து சட்டரீதியான அனுமதிகள், சம்பந்தப்பட்ட பகுதியின் புவியியல் மற்றும் நிலவியல் நிலைமைகள், போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமையும்.

ரயில்வே மின்மயமாக்கலால் கீழ்க்கண்ட முக்கியப் பலன்கள் கிடைக்கின்றன:

 

•    தூய்மையான மற்றும் பசுமையான போக்குவரத்து முறை

•    சிறந்த சரக்குப் போக்குவரத்து திறன்.

•    கரியமிலவாயு  வெளியேற்றம் குறைதல்

•    கச்சா எண்ணெய் மூலமான அந்நியச் செலாவணியை சேமித்தல்

 

ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைத் தெரிவித்தார்.

***

ANU/SMB/PLM/DL



(Release ID: 1983336) Visitor Counter : 56


Read this release in: Hindi , Punjabi , English , Urdu