உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, குஜராத்தின் ஜுனாகத்தில் திவ்யகாந்த் நானாவதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ஸ்மிருதி பர்வ்' நிகழ்ச்சியில் உரையாற்றினார்


திவ்யகாந்த் நானாவதி சமூகத்திற்காகவும் மக்களுக்காகவும் வாழ்ந்தார் : உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா

Posted On: 02 DEC 2023 5:20PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா, குஜராத்தின் ஜுனாகத்தில் திவ்யகாந்த் நானாவதியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ஸ்மிருதி பர்வ்' நிகழ்ச்சியில் இன்று (02-11-2023) உரையாற்றினார்.

திவ்யகாந்த் நானாவதி சமூகத்திற்காகவும் மக்களுக்காகவும் வாழ்ந்தவர்களில் ஒருவர் என்று திரு அமித் ஷா தனது உரையில் கூறினார். 100 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு நபர் நினைவு கூரப்படுகிறார் என்றால், அந்த நபரின் வாழ்க்கை உண்மையிலேயே அர்த்தமுள்ளதாக இருந்துள்ளது என பொருள் என்று திரு அமித் ஷா கூறினார். திவ்யகாந்த் தொடர்ந்து இரண்டு முறை சட்டப் பேரவை உறுப்பினராகவும், குஜராத் அரசில் சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சராகவும் இருந்ததை அவர் குறிப்பிட்டார். அவர் ஜுனாகத் பகுதிக்கு மட்டுமல்லாமல் முழு குஜராத்தின் நலனுக்கும் ஏராளமான பங்களிப்புகளை வழங்கியுள்ளதாக திரு அமித் ஷா தெரிவித்தார்.

மிகச்சிறந்த ஆளுமையான நர்சிங் மேத்தா தமது வாழ்நாள் முழுவதையும் பக்தி இலக்கியத்திற்காக அர்ப்பணித்ததாக அவர் தெரிவித்தார். அன்றைய காலத்தில் தீண்டாமையைப் போன்ற சமூகத் தீமைகளை எதிர்க்கும் துணிவு நர்சிங் மேத்தா போன்ற சிலருக்கு மட்டுமே இருந்ததாக திரு அமித் ஷா தெரிவித்தார். சமூக நீதியைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள விரும்பினால், நர்சிங் மேத்தாவை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கூறினார். நர்சிங் மேத்தாவின் இந்த புனித பூமியில், திவ்யகாந்த்-தின் நினைவாக ரூபயதன் சன்ஸ்தா அமைப்பு ஒரு நூலை வெளியிட்டுள்ளது என்று அவர் கூறினார்.

கடந்த 75 ஆண்டுகளாக சமூக வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களில் ரூபயதன் சன்ஸ்தா மிகச் சிறந்த பணிகளைச் செய்து வருவதாக திரு அமித் ஷா பாராட்டுத் தெரிவித்தார். குஜராத் மற்றும் சௌராஷ்டிராவின் கலைகளை பழைய தலைமுறையினரிடமிருந்து புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியை திரு பைக்டன்  காத்வி செய்துள்ளார் என்று அமைச்சர் கூறினார். திரு பைக்டனின் பங்களிப்பை அங்கீகரித்து அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். தகுதியான நபர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கும் வகையில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார் என்று உள்துறை அமைச்சர் தி்ரு அமித் ஷா தெரிவித்தார்.

*******

ANU/AD/PLM/DL(Release ID: 1981944) Visitor Counter : 92