வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உள்கட்டமைப்பு மீதான இந்தியாவின் கவனம் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது: திரு கோயல்
Posted On:
01 DEC 2023 12:31PM by PIB Chennai
உள்கட்டமைப்பு மீதான இந்தியாவின் கவனம் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும் அதை ஊக்குவிப்பதுமாகும் என்று மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
3 வது இந்தியக் கடன் மூலதனச் சந்தை உச்சிமாநாடு 2023 - ல் "மேல் மற்றும் மேல்நோக்கி" என்ற தொடக்க அமர்வில் உரையாற்றிய அவர், உள்கட்டமைப்பை நோக்கி இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் துறையின் முதலீடுகள் நாட்டின் உள்கட்டமைப்புத் திறன்களை மேம்படுத்துகின்றன என்று கூறினார். பங்குச் சந்தையும் முதல் முறையாக 4 டிரில்லியன் புள்ளிகளைத் தொட்டுள்ளதாகவும், முதல் ஐந்து உலகளாவிய சந்தைகளில் ஒன்றாக இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்தக் காலாண்டில் 7.6 சதவீதத்துடன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாகவும், வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும் இந்தியா திகழ்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். "உலகம் இன்று இந்தியாவை நம்புகிறது" என்று குறிப்பிட்ட திரு கோயல், உலகின் நம்பகமான கூட்டாளியாகவும், சட்டத்தின் ஆட்சியை மக்கள் அங்கீகரித்து மதிக்கும் துடிப்பான ஜனநாயகமாகவும் நாடு மிகவும் பிரகாசமான எதிர்காலத்தின் விளிம்பில் நிற்கிறது என்று குறிப்பிட்டார்.
புதிய கண்டுபிடிப்புகள், தொழில்முனைவு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு கடன் மூலதன சந்தை ஊக்கியாக இருக்கும் என்று திரு கோயல் நம்பிக்கை தெரிவித்தார். இரண்டாம் நிலை நகரங்களும் பெருநகரங்களாக மாற உள்ள நிலையில், அடுத்த சில தசாப்தங்களில் நகரமயமாக்கல் பெருமளவில் நிகழும் என்று அவர் குறிப்பிட்டார். கிராமப்புறங்களின் வருமானம் அதிகரித்து, நாடு முழுவதும் செலவு செய்யும் சக்தி அதிகரித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், மின்சார வாகனங்கள் போன்ற துறைகள் நமது எதிர்காலத்தை இயக்கும். பசுமை மற்றும் நிலையான எரிசக்தி முன்னோக்கி செல்லும் வழியாகும். மேலும் மூலதனச் சந்தைகள் மற்றும் கடன் சந்தைகள் குறைந்த கார்பன் பொருளாதாரத்திற்கு நமது எரிசக்தி மாற்றத்தில் தங்கள் பங்கைக் கொண்டுள்ளன. வாய்ப்பைத் தவறவிடாமல் அச்சமின்றி கார்ப்பரேட் உலகம் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று திரு கோயல் கேட்டுக்கொண்டார்.
***
ANU/SMB/BS/AG/KPG
(Release ID: 1981526)
Visitor Counter : 103