உள்துறை அமைச்சகம்

ஜோஷிமத்தில் மீட்பு மற்றும் புனரமைப்பிற்காக ரூ.1658.17 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 30 NOV 2023 4:21PM by PIB Chennai

ஜோஷிமத்தில் மீட்பு மற்றும் புனரமைப்பிற்காக ரூ.1658.17 கோடி மதிப்பிலான  திட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

 

மீட்பு மற்றும் புனரமைப்புத் திட்டத்தின் கீழ், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் மீட்பு மற்றும் புனரமைப்பு தொகுப்பிலிருந்து ரூ.1079.96 கோடி மத்திய அரசால் வழங்கப்படும். மாநில அரசு தனது மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவிக்காக ரூ.126.41 கோடியும், மீள்குடியேற்றத்திற்கான நிலம் கையகப்படுத்தும் செலவு ரூ.91.82 கோடி உட்பட ரூ.451.80 கோடியை மாநில பட்ஜெட்டில் இருந்தும் வழங்கும்.

 

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதுமேலும் மாநில அரசுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப மற்றும் தளவாட உதவிகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

 

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ் அனைத்து தொழில்நுட்ப முகமைகளும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதன் மூலம் ஜோஷிமத்திற்கான மீட்பு திட்டத்தை விரைவாக தயாரிக்க மாநில அரசுக்கு உதவியது.

 

*******

(Release ID: 1981140)

ANU/SMB/IR/RR/KRS



(Release ID: 1981339) Visitor Counter : 96