தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

54-வது இந்திய சர்வதேசத் திரைப்படவிழாவில் ஐ.சி.எஃப்.டி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்தை ஆன்டனி சென் இயக்கிய டிரிஃப்ட் திரைப்படம் வென்றது

54-வது இந்திய சர்வதேசத் திரைப்படவிழாவில் ஐ.சி.எஃப்.டி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்தை ஆன்டனி சென் இயக்கிய டிரிஃப்ட் திரைப்படம் வென்றது. கோவாவில் இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

அதிர்ச்சிகரமான மற்றும் பயங்கரமான யதார்த்தத்தால் அலைந்து திரியும் ஒரு புலம்பெயர்ந்த பெண்ணின் உணர்ச்சிகரமான சித்திரம் இந்த படம். 

வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளைக் கடந்து செல்வது எதிர்பாராத பிணைப்புகளுக்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதை இப்படம் சித்தரிக்கிறது. இத்திரைப்படம் அலெக்சாண்டர் மக்சிக் எழுதிய 'எ மார்க்கர் டு மெசர் டிரிப்ட்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது.  
ஐ.சி.எஃப்.டி பாரிஸ் மற்றும் யுனெஸ்கோவால் நிறுவப்பட்ட காந்தி பதக்கம் என்பது அமைதி, அஹிம்சை, இரக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் குறித்த மகாத்மா காந்தியின் பார்வையை சிறப்பாக பிரதிபலிக்கும் ஒரு திரைப்படத்திற்கு இந்த விருது வழங்கப்படுகிறது.  

*********


(Release ID: 1980513)
ANU/AD/IR/AG/KRS


(रिलीज़ आईडी: 1980557) आगंतुक पटल : 163
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , Konkani , हिन्दी , Punjabi