தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவில் திரையிடப்பட்ட 'தி ஃபெதர்வெயிட்' திரைப்படம் ஆசியாவின் பிரீமியர் காட்சியாக வெளியானது


ரசிகர்களுடன் இணைப்பு நீடிக்கும் வரை சினிமா உண்மையிலேயே சர்வதேசம்தான்: இயக்குநர் ராபர்ட் கொலோட்னி

Posted On: 28 NOV 2023 4:27PM by PIB Chennai

"54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் படத்தை திரையிடுவது எங்களுக்கு நம்பமுடியாத விஷயமாக இருக்கிறது. இந்தப் படம் பல வருட ஆராய்ச்சி மற்றும் கடின உழைப்புக்கான வெளிப்பாடு" என்று தி ஃபெதர்வெயிட் படத்தின் இயக்குனர் ராபர்ட் கொலோட்னி தெரிவித்தார். இந்த அமெரிக்க படம் இன்று கோவாவில் 54 வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் நிறைவுப் படமாக திரையிடப்பட்து.

பிஐபி ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய திரைப்பட இயக்குநர் ராபர்ட் கொலோட்னி, குத்துச்சண்டையில் அதிக எண்ணிக்கையிலான சண்டைகளில் சாதனை படைத்த இத்தாலிய-அமெரிக்க குத்துச்சண்டை வீரர் வில்லி பெப்பின் நிஜ வாழ்க்கைக் கதையைப் பற்றியது இந்தப் படம் என்று குறிப்பிட்டார். இவர் 241 போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். "மறைந்த குத்துச்சண்டை வீரரின் சொந்த ஊரில் படப்பிடிப்பை நடத்துவதில் இருந்து, அவரது உண்மையான குத்துச்சண்டை கையுறைகளைப் பயன்படுத்துவது வரை, இந்தப் படம் உண்மை மற்றும் புனைகதை, யதார்த்தம் மற்றும் சினிமா ஆகியவற்றுக்கு இடையிலான நடனம்" என்று இயக்குர் விவரித்தார். மறைந்த குத்துச்சண்டை வீரரை நிஜ வாழ்க்கையில் அறிந்தவர்களால் இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் நடிக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

குத்துச்சண்டையின் கதைக்களத்தை தனது இயக்குநராகத் தேர்ந்தெடுப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த கொலோட்னி, வில்லி பெப்பின் துடிப்பான வாழ்க்கை வரலாறு, விளையாட்டு வாழ்க்கையின் ஆர்வம் மற்றும் மனித வாழ்க்கையின் யதார்த்தம் ஆகியவை தகவல், பொழுதுபோக்கு மற்றும் யதார்த்தத்திற்கு நெருக்கமான ஒரு கதையை உருவாக்கத் தன்னை ஈர்த்ததாக கூறினார். "சர்வதேச அரங்கில் சினிமா மூலம் தொடர்பு கொள்வது எனக்கு மிகவும் முக்கியமானது", என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தயாரிப்பாளர் பென்னட் எலியட் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டபோது, "மறைந்த குத்துச்சண்டை வீரரின் சொந்த ஊரில் படப்பிடிப்பு நடத்துவதும், உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெறுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. அவரது ஆன்மா எப்போதும் எங்களுடன் இருந்தது, ஒரு சுயேச்சையான திரைப்படமாக இந்தத் திட்டத்தில் நாங்கள் நிறைய அர்ப்பணிப்பையும், உழைப்பையும் செலுத்தினோம்.

வில்லி பெப்பின் வாழ்க்கையை அனுபவிப்பதும், அவரது காலணிகளில் இருப்பதும் ஒரு நடிகராக கற்பனை செய்ய முடியாத அனுபவம் என்று நடிகர் ஜேம்ஸ் மேடியோ கூறினார். "குத்துச்சண்டை வளையத்திற்குள் நுழைந்து இந்த சுயேச்சையான திரைப்படத்தை உருவாக்கியது ஓர் அதிசயம் என்றார்.

"இது பல வருட ஆராய்ச்சியின் விளைவாகும், எங்கள் படத்துடன் 54வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவை நிறைவு செய்வது எங்களுக்கு ஒரு கௌரவம்" என்று எழுத்தாளர் ஸ்டீவ் லோஃப் கூறினார்.

படத்தின் சுருக்கம்:

1960களின் நடுப்பகுதியை சித்தரிக்கும் தி ஃபெதர்வெயிட், இத்தாலிய-அமெரிக்க குத்துச்சண்டை வீரர் வில்லி பெப்பின் உண்மை வாழ்க்கைக் கதையில் ஒரு விறுவிறுப்பான அத்தியாயத்தை முன்வைக்கிறது - அவர் தனது 40-களின் நடுப்பகுதியில், தனிப்பட்ட வாழ்க்கை சீர்குலைந்த நிலையில், ஆடுகளத்திற்குத் திரும்ப முடிவு செய்கிறார். அந்த நேரத்தில் ஒரு ஆவணப்பட கேமரா குழு அவரது வாழ்க்கையில் நுழைகிறது. இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்க ஆண்மை, புகழ், சுய உணர்வு ஆகியவற்றின் அதிருப்திகளின் உள்ளடக்கத்தைச் சித்தரிப்பதாக உள்ள இந்தப் படம் கடினமாக ஆராய்ச்சி செய்யப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.

* * *


ANU/SMB/PKV/RR/KPG

 



(Release ID: 1980491) Visitor Counter : 147